9716 அசோகனின் வைத்தியசாலை (நாவல்).

நடேசன். அவுஸ்திரேலியா: N&S Nadesans PTY (Australia), 9, Prospector Court, Wheelers Hill, Victoria 3150, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (தமிழ்நாடு: கருப்பு பிரதிகள், B.55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 600005).

404 பக்கம், விலை: இந்திய ரூபா 300., அளவு: 22.5×14.5 சமீ.

அசோகச் சக்கரவர்த்தி மிருகங்களுக்காக ஒரு வைத்தியசாலையை நிறுவியிருந்தார் என்பது வரலாறு.  இந்நூலின் தலைப்பு இதனைப் பிரதிபலிக்கின்றது. ஒரு மிருகவைத்தியசாலையில் பணிபுரியும் சிவாவின் அனுபவங்களே இந்நாவலின் கதையம்சம்.  பொதுவாகத் தமிழில் பேணப்பட்டுவரும் தமிழ்ச் சமூகம் பற்றிய புனித அடையாளங்களையும் இயல்புகளையும் இந்நாவல் மறுக்கின்றது. இதில் வருகின்ற தமிழ்ப் பாத்திரங்கள், தாங்கள் வாழ்கின்ற காலத்தின், சூழலின் நிலைமைகளின் தாற்பரியங்களை ஏற்றும் அனுசரித்தும் விலகியும் மறுதலித்தும் ஒத்தோடியும் வாழ்கின்றன. மிருகவைத்தியசாலை  ஒரு அறியப்படாத தனியுலகம்.  நோயுற்ற மிருகங்கள் வந்தபடியே உள்ளன.  அவை ஒவ்வொன்றும் தெளிவான குணங்கள் கொண்ட ஆளுமைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் உரிமையாளர்களுக்கும் அவற்றுக்குமான உறவும் பல உள்ளோட்டங்களைக் கொண்டது. மேலைத்தேய வாழ்நிலை, தமிழ்ச் சமூகத்தில் இது ஒரு மாயையாகக்கூட தோற்றமளிக்கலாம். இக்கதைகளை ஒவ்வொன்றாகச் சொல்லிச் செல்லும் இந்நாவல் ஒரு கட்டத்தில் இரண்டு எண்ணங்களை நோக்கிச் செலுத்துகின்றது.  ஒன்று-இந்த வாழ்க்கை மனிதர்களால் மட்டும் ஆனது அல்ல. மிருகங்களும்  கூட வாழ்க்கையின் பிரஜைகளே என்ற பார்வை. இன்னொன்;று இங்கே மிருகங்கள் எனச் சொல்லப்பட்டிருப்பவை  உண்மையிலேயே  ஐந்தறிவு மிருகங்கள் தானா என்ற எண்ணம். இவ்விரு கோணங்களும் இந்நாவலை இருவேறு வாசிப்புச் சாத்தியங்களை நோக்கிச் செலுத்துகின்றன. அதுவே இந்நாவலின் அழகியலின் வெற்றி. நொயல் நடேசன், தனது வண்ணாத்திக்குளம்  என்ற முதல் நாவலின் மூலமே ஈழத்து இலக்கிய உலகில் நன்கு அறியப்பெற்றவர். இந்நாவல் ஆங்கிலத்தில் டீரவவநசகடல டுயமந என்ற பெயரிலும் சிங்களத்தில் ‘சமணலவெவ’ என்ற பெயரிலும்  மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து  வெளிவந்த இரண்டாவது நாவலான ‘உனையே மயல் கொண்டு” ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. அசோகனின் வைத்தியசாலை இவரது மூன்றாவது நாவலாகும்.

ஏனைய பதிவுகள்

Free Bingo Web sites

Content Exactly how we Speed Uk Casinos Having 5 Free Added bonus – go to my site How can step 1 Bingo Video game Work?