9731 பயணம் தொடர்கிறது.

நாவண்ணன். மட்டக்களப்பு: தொண்டன் வெளியீட்டுத் திட்டம், சமூகத் தொடர்பு நிலையம், தபால் பெட்டி எண் 44, 1வது பதிப்பு, நவம்பர் 1988. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்).

(9), 161 பக்கம், விலை: ரூபா 25.00, அளவு: 17.5×12.5 சமீ.

1956-61 வரையிலான அரசியல் போராட்ட வரலாற்று நாவல். தொண்டன் சஞ்சிகையில் 20 மாதங்களாகத் தொடர்ந்து வெளிவந்தது. இலங்கையைக் களமாகவும், ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளின் ஆரம்பக் கட்டத்தில் நடந்த அகிம்சைப் போராட்டத்தினைக் கருவாகவும் கொண்டு ஒரு குடும்பக் கதையைப் பிரதேச வாசனையுடன் நாவலாகப் படைத்திருக்கிறார். 1956இல் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டம், 1958இல் நடைபெற்ற இனக் கலவரம் ஆகியவற்றின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் அரசியற் செய்திகளை இடையிடையே செருகி, அழகுமணி என்னும் போராளியை முக்கிய பாத்திரமாக்கி நாவலின் கதையை  நாவண்ணன் நகர்த்திச் செல்கிறார். அவனைக் காதலிக்கும் சந்திரா, அழகுமணி, போராளியாகவல்லாது, தனக்கு நல்ல கணவனாக முழுமையாகக் கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். அவனால் அப்படி அமைய இயலாமல் போகும் என்ற நிலைமைக்கு முகம்கொடுக்கும் போது, தனது பாதையை மாற்றிக்கொள்ள விழைகின்றாள். அழகுமணியின் ஆசியுடன் வேறொருவனை அவள் மணந்துகொண்டபோதிலும், அந்த வாழ்க்கையும் இனப்படுகொலைச் சூழலில்  சிதைந்துபோகின்றது. சந்திரா மீண்டும் அழகுமணியின் போராட்டப் பாதைக்கு வந்து சேர்கிறாள் என்பதாக கதை முடிவடைகின்றது.

ஏனைய பதிவுகள்

12137 – செல்வச் சந்நிதி முருகன் புகழ்மாலை.

அமரர் திருமதி செல்லம்மா பாலசுந்தரம் நினைவுக்குழு. யாழ்ப்பாணம்: அமரர் திருமதி செல்லம்மா பாலசுந்தரம் நினைவுக்குழு, கரணவாய் தெற்கு, 1வது பதிப்பு, நவம்பர் 2003. (கொழும்பு 12: லீலா அச்சகம்). 57 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,