9742 இலக்கியப் பொய்கை: எட்டாம் வகுப்பு.

அ.ஸ.அப்துஸ் ஸமது. அக்கரைப்பற்று: பிறைப்பண்ணை வெளியீடு, 1வது பதிப்பு, 1961. (யாழ்ப்பாணம்: கு.வி.தம்பித்துரை, கலைவாணி அச்சகம், 10, பிரதான வீதி).

(5), 144 பக்கம், விலை: ரூபா 1.75, அளவு: 18.5×12.5 சமீ.

கல்விப் பகுதியினரின் இலக்கியப்பாடத் திட்டத்திற்கேற்ப எழுதப்பெற்றது. முதலாம் பகுதி கவிதைப் பிரிவாகவும் இரண்டாம் பகுதி உரைநடைப் பிரிவாகவும் வகுத்துத் தரப்பட்டுள்ளது. கவிதைப் பகுதியில் என் இறைவன், தமிழின் சிறப்பு, உமறு கத்தாப் ஈமான் கொள்ளல், சுலைமான் நபியும் விறகுவெட்டியும், கண்ணகி வழக்குரைத்தல், சிற்றில் சிதைத்தல், சுட்ட பழமா? சுடாத பழமா?, புதுக் கவிதைகள் (கிளி, பலத்தின் இரகசியம், நெஞ்சின் அலைகள், மனத்திறன் வேண்டும், போகின்ற பாரதமும்), செய்யிதத்துப் படைப்போர், கலன்கள் கண்ட காவலன், பிர்தெவ்ஸி (கவிதை நாடகம்), நீதிப் பகுதி (திருக்குறள், சீறாப்புராணம், மாநபி மணிமொழிகள், பழமொழி, இனியவை நாற்பது), நள-தமயந்தியர் பிரிவு, றஹ்மான் கண்ணி, சுவை மஞ்சரி அகிய 15 தலைப்புகளில் பாடங்கள் தரப்பட்டுள்ளன. உரைநடைப் பகுதியில், கற்றாய்ந்தொழுகு (ஐ.எல்.எம்.மஷ{ர்), இமாம் அபஹனிபாவின் அறிவுத்திறன் (எம்.அப்துல் வஹாப்), கவிதையில் உவமை (கா.அப்துல் கபூர்), முற்காலத்து இஸ்லாமிய நாடுகளில் விஞ்ஞானம் (ஏ.டபிள்யூ. மயில்வாகனம்), பேரறிஞர் ரி.பி.ஜாயா (ஏ.ஏம்.ஏ.அஸீஸ்), கடற்கரையிலே உமறுப்புலவர் (ரா.பி.சேதுப்பிள்ளை), கொழும்புத் திட்டம் (ரி.இப்றாலெப்பை), இஸ்லாமியரும் தமிழும் (சு.வித்தியானந்தன்), மொகலாய ஓவியம் (எம்.எஸ்.ஏ.அஸீஸ்), வனம்புகச் சீதையின் மனத்துடிப்பு (பொ.கிருஷ்ணபிள்ளை), நாகரிகம் (அ.ஸ.அப்துஸ் ஸமது) ஆகிய 11 கட்டுரைகளின் உரைப்பகுதிகளும் இடம்பெற்றுள்ளன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 87013).

ஏனைய பதிவுகள்

Cazinouri Online Romania

Content Tennis stars rotiri fără sloturi – Cei Mai Buni Furnizori Să Software Pentru Sloturi Online În România Cum Ş Găsiți Acel MaiBun Cazinou Când

Koningskroon Bank Geloofwaardig plus Fair

Inhoud Football legends bonusspel – Rechtstreeks dealers bij het spelen va Blackjac Online Gissen Nederlan Gokhuis Offlin Bank Toeslag Pastoor kundigheid jou poen deponeren bij

10929 காலம் கடந்தும் வாழும் கலைஞன்.

மலர்க் குழு. பண்ணாகம்: அமரர் இரத்தினசிங்கம் கிருஷ்ணதுரை குடும்பத்தினர், 1வது பதிப்பு, மே 2015. (யாழ்ப்பாணம்: திருமொழி அச்சகம், சங்கானை). 100 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. யாழ்ப்பாண

11730 சாகுந்தல நாடகம்.

மறைமலை அடிகள். வல்வெட்டித்துறை: ஜனனி வெளியீட்டகம், புது வளவு, பொலிகண்டி, மீள் பதிப்பு, 2012, 5வது பதிப்பு, 1957. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 128 பக்கம், விலை: