எம்.எஸ்.ஸ்ரீதயாளன். கொழும்பு 13: துணைப்பாடநூல் வெளியீட்டுப் பிரிவு, கு.வி.அச்சகம், 58, கிறீன் லேன், 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 13: கு.வி.அச்சகம்).
xix, 400 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×15 சமீ.
ஸ்ரீதயாளனின் கட்டுரைக்கலசம், தரம் 9-11 மாணவர்களுக்கும் க.பொ.த. தேர்வுநாடிகளுக்கும் உகந்த வகையில் 100 எடுத்துக்காட்டுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. கட்டுரைகள், கடிதங்கள், அறிக்கைகள், செவ்விகள், உரையாடல், நாடகம், மாதிரிப்பயிற்சிகள், விளக்கங்கள் என பல்வேறு வழிகாட்டிகளுடன் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் முன்னாள் உதவிப் பணிப்பாளரான நூலாசிரியர், கல்வி, இந்து கலாசார, தேசிய அமைச்சகங்களில் பணியாற்றியவர். பாடநூல் வளவாளராக இருந்த அனுபவம் மிக்கவர்.