க.வீரகத்தி (உரை விளக்கம்) யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, ஆனந்தா புத்தகசாலை, 226, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, வைகாசி 1966. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி).
196 பக்கம், விலை: ரூபா 3.75, அளவு: 21×14 சமீ.
கந்தபுராணம்- உற்பத்திக்காண்டத்தின் காமதகனப் படலம், மோனநீங்கு படலம், தவங்காண் படலம், மணம்பேசு படலம், வரைபுனை படலம், கணங்கள் செல் படலம் ஆகியவற்றை உள்ளடக்கியது. 1967-68க்குரிய க.பொ.த. உயர்தர தமிழ் பாடத்திற்குரிய செய்யுட் பகுதிக்கு இசைவாக வெளியிடப்பட்ட உப பாடநூல். நூலாசிரியர் பண்டிதர் க.வீரகத்தி, கரவெட்டி வாணி கலைக்கழகத்தின் இயக்குநராவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 140612).