ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை. யாழ்ப்பாணம்: செ.சிவகுருநாதன், நாயன்மார்கட்டு, 2வது பதிப்பு, தை 1944. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை).
(4), 94 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 21.5×14 சமீ.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரித் தமிழ்ப் போதகாசிரியரும் இந்து சாதனப் பத்திரிகையாசிரியருமான ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை இயற்றிய பதவுரை, விசேடவுரை, இலக்கணக் குறிப்பு, நூலாசிரியர் வரலாறு முதலியவற்றுடன் கூடிய நூல். வில்லிபுத்தூரர் இயற்றிய பாரதத்தின் ஆரணிய பருவத்தின் (காண்டம்) முதற் சருக்கமாகிய அர்ச்சுனன் தவநிலைச் சருக்கம் சிறந்த கவிகளால் சிவபரத்துவத்தை நன்கு எடுத்துக் கூறுவதாகும். இந்நூலின் முன்னைய பதிப்பு விபரம் நூலில் குறிப்பிடப்படவில்லை. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 98786).