9778 ஒளவை குறள்: மூலமும் தெளிவுரையும்.

ஆய்வுப் பிரிவு. கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13: கௌரி அச்சகம், ஆட்டுப்பட்டித் தெரு).

x, 103 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.

தமிழ்மொழியில் பெண்பாற் புலவர் வரிசையில் ஒளவையார் முதன்மையானவராகக் கருதுவர். தமிழ் வரலாற்றறிஞர்கள் ஒளவையார் என்ற பெயரில் சங்ககாலம், மற்றும் 10ம், 16ஆம் நூற்றாண்டுகளில் இதே பெயரில் மூவர் வாழ்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார்கள். சங்ககால ஒளவையார், கடையெழு வள்ளலான அதியமான் நெடுமாள் அஞ்சியிடம் நெல்லிக்கனி பெற்றவர். பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒளவையார் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்ற நீதி நூல்களை இயற்றியவர். சமய இலக்கியங்கள் தோற்றம்பெற்ற பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் எழுதியதே ஒளவை குறள். சைவ, வைணவ சமயங்கள் பிரபல்யம் பெற்றிருந்த அக்காலத்திலேயே  சமகாலத்தில் கம்பரும் வாழ்ந்ததாகக் குறிப்பிடுவர். தத்துவ ஞான நூலாகவும், சைவ சமயக் கருத்துக்களை விளக்கும் வண்ணமாகவும் ஒளவை குறள்அமைந்துள்ளது. திருவள்ளவரின் திருக்குறளைப் போன்று வீட்டு நெறிப்பால் (100 குறட்பாக்கள்), திருவருட்பால் (100 குறட்பாக்கள்),  தன்பால் (110 குறட்பாக்கள்) என்ற முப்பிரிவுகளில் இரு அடிகள் கொண்ட மொத்தம் 310 குறட்பாக்களால் அமைக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Jak stworzyć firmową witrynę stopniowo?

Content Kasyno queen of the nile: Umieszczanie tytułu stronicy profesjonalistów sieciowych Kiedy Błyskawicznie skonstruować witrynę z wykorzystaniem ChatGPT [Przewodnik gwoli początkujących] Zamiary cenowe sieci Web

Online game, Laws and much more!

Content 3: Assessment the brand new Shortlisted Web sites Finest online blackjack websites Finest 5 Gambling enterprises to play Black-jack On the internet Nuts Casino