பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கம். லண்டன் Eelavar Literature Academy of Britain (ELAB), Century House, 35 Brandreth Court, Harrow, Middlesex, HA1 2JU,1வது பதிப்பு, 2014. (லண்டன்: அச்சக விபரம் தரப்படவில்லை).
176 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-873265-19-2.
நல்ல கலை இலக்கியங்களை வளம்படுத்தவெண்ணி கலையார்வம் கொண்டவர்களால் 2006இல் லண்டன் கொலிண்டேல் பகுதியில் உருவாக்கப்பட்டது தான் பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கம். எழுத்தாளர்களின் ஒருங்கிணைப்பினால் மாதாமாதம் இலக்கிய நிகழ்வுகளை நடாத்தி அதன்மூலம் பெறப்பட்ட இலக்கிய வடிவங்களை புடம்போட்டு கனகச்சிதமாக பூந்துணர் என்னும் நூலாக வெளியிட்டுள்ளனர். 2007இல் முதலாவது தொகுதி வெளிவந்துள்ளது. இந்த நான்காவது தொகுப்பில் சீதாதேவி மகாதேவாவின் ஆறு ஆக்கங்களும், நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களது ஒன்பது ஆக்கங்களும், பேராசிரியர் கோபன் மகாதேவாவின் பதினொருஆக்கங்களும், எஸ்.கருணானந்தராஜாவின் ஏழு ஆக்கங்களும், திருமதி தயா கருணானந்தராஜாவின் ஒரு ஆக்கமும், செல்வி உமா மகாதேவாவின் ஒன்பது ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. படைப்பாளிகளின் பெயரின் கீழ் அவ்வப்படைப்பாளிகளின் ஆக்கங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. படைப்பாளி பற்றிய விபரக்குறிப்பும் காணப்படுகின்றன. இறுதிப்பிரிவில் முல்லை அமுதன், ஐ.தி.சம்பந்தன், பொன் பாலசுந்தரம், உஷா நாகசாமி, நூலகவியலாளர் என்.செல்வராஜா ஆகியோரின் விமர்சன/அறிமுகக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இதிலுள்ள கட்டுரைகள் பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கம் அவ்வப்போது ஒழுங்குசெய்த சந்திப்புகளில் படிக்கப்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.