9823 தமிழோடு அவாவுதல்.

பா.துவாரகன் (தொகுப்பாசிரியர்). சுவிட்சர்லாந்து: சுகர்யா வெளியீட்டகம், 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரிண்டர்ஸ், ஆஸ்பத்திரி வீதி).

108 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 20.5×14 சமீ.

இந்நூல், 2008 முதல் 2009 வரையான காலகட்டத்தில் மதுரைப் பண்டிதர் அமரர் க. நாகலிங்கம் அவர்களுடன் தான் மேற்கொண்ட உரையாடல்களின் (நேர்காணல்) வழியாக தமிழ் இலக்கணத்தினதும் தமிழ் இலக்கியத்தினதும் முக்கியத்துவம் குறித்த தெளிவான பார்வையை இந்நூலில் தொகுத்து வழங்கியிருக்கிறார். மொழியின் பயன்பாடு, இலக்கணத்தின் அவசியம், தமிழ்மொழியின் தற்போதைய நிலை மற்றும் தேவைகள் குறித்த பண்டிதரின் விரிவான பார்வையை இந்நூலிலிருந்து ஒரு சுவாரஸ்யமான நேர்காணல் வடிவத்தில் பெற்றுக்கொள்ள முடிகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 234878).       

ஏனைய பதிவுகள்

12067 – சைவ நெறி: 11ஆம் தரம்.

சொர்ணவதி மாசிலாமணி (பதிப்பாசிரியர்). இலங்கை: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாயா, பத்தரமுல்லை, 18ஆவது பதிப்பு, 1999, 1வது பதிப்பு, 1980. (இலங்கை: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). x, 184 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: