சி.குமாரலிங்கம். யாழ்ப்பாணம்: சி.குமாரலிங்கம், 149, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, டிசம்பர் 2013.(யாழ்ப்பாணம்: சத்தியா பிரிண்டர்ஸ், 153/11 நாவலர் வீதி).
52 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 ச.மீ., ISBN: 978-955-51477-3-6.
காதலும் துன்பியலும் நிறைந்த நாடகமான ரோமியோவும் ஜுலியட்டும் நூலாசிரியரின் பார்வையில் இங்கு விமர்சிக்கப்படுகின்றது. நாடக கதாபாத்திரங்கள், நாடகம் திரைக்குப் பின்னர் உள்ள குழுப்பாடலுடன் ஆரம்பமாகின்றது, பொதுவீதியில் முதல் காட்சி ஆரம்பமாகிறது, றோமியோ தற்கொலை செய்துகொள்ளுதல், ஜுலியட்டும் மரணமடைதல், ஜுலியட்டை மணக்க விரும்பும் பாரிஸ் பிரபு, கம்பரும் ஷேக்ஸ்பியரும், கம்பரும் பாரதியாரும், ஷேக்ஸ்பியரின் பின்புலம், றோமியோவின் காதல் பாடல், ஷேக்ஸ்பியரின் வரலாறு, ஷேக்ஸ்பியரும் கார்ல் மார்க்சும், மார்லோ கிரிஸ்டோப்பர் ஷேக்ஸ்பியர் காலத்து நாடகாசிரியர், றோமியோ ஜுலியட் டூயட் பாடல், ஜுலியட்டின் மரணம் பற்றிய பிழையான தகவல்கள், Dydeny Finkelstein, சுதந்திரமாதலும் கலையும், ஷேக்ஸ்பியர் வரலாற்றுத் தொடர்ச்சி ஆகிய தலைப்புகளில் இந்நூல் விரிகின்றது. வங்கி மேலாளரான சி.குமாரலிங்கம், இலக்கியத்திலும் ஈடுபாடுகொண்ட முற்போக்குச் சிந்தனையாளர். இவரது அன்னையார் மீசாலை வீரசிங்கம் கல்லூரியின் தாபகர் அமரர் வேதாரணியம் வீரசிங்கம் அவர்களின் பூட்டி என்பதும், தந்தையார் அமரர் மு.சின்னத்தம்பி அவர்கள் மேற்படி பாடசாலையின் முதல் 40 ஆண்டுக்கால அதிபராகப் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.