9843 இலங்கை: புவியியல் வளம் மக்கள்.

எல்.சி.கே. குக்கு (மூலம்), கா.குலரத்தினம் (பதிப்பாசிரியர்), சோ.நடராசன் (தமிழாக்கம்). இலங்கை: அரச கரும மொழித் திணைக்களம், கொழும்பு, 1வது பதிப்பு, 1959. (இலங்கை: அரசாங்க அச்சகம்).

xii, 410 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

இலண்டன் பல்கலைக்கழகத்தின் புவியியல் அறிஞரான குக்கு அவர்கள் எழுதிய மூலநூலினை திருத்தியும் புதுக்கியும் இலங்கைப் புவியியல் என்ற பெயரில் கா.குலரத்தினம் அவர்கள் எழுதியிருந்தார். அந்நூலின் தமிழாக்கத்தினை சோ.நடராசன் அவர்கள் மேற்கொண்டிருந்தார். இலங்கைப் பாடசாலைகளில் தமிழ்மொழி மூலக் கற்கைநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டவேளையில் மொழிபெயர்க்கப்பட்ட பல்வேறு நூல்களுள் இதுவும் முக்கியமானதொன்று. வரலாற்றுப் புவியியல், பௌதிகப் புவியியல், பொருளாதாரப் புவியியல் மக்கட் புவியியல், ஆகிய பிரதான நான்கு பகுதிகளைக் கொண்ட இந்நூலின் ஐந்தாம் பகுதி, நூற் சுருக்கமாக அமைகின்றது. இலங்கையின் இயற்கைப் பிரதேசங்கள், முடிவுரை ஆகியன இப்பிரிவில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 91106).

ஏனைய பதிவுகள்

17649 என் வாசல் வந்த கங்கை.

விக்கி நவரட்ணம். சுவிட்சர்லாந்து: விக்கி நவரட்ணம், Av-Maurice Troillet-1,1950, Sion, 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்). (16), 287 பக்கம், விலை: ரூபா 500., அளவு: