9847 சுற்றாடற் புவியியல்.

க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1995. (யாழ்ப்பாணம்: டினேஷ் அச்சகம், கல்வியங்காடு).

(5), 268 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ.

1995ஆம் ஆண்டிலிருந்து கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர வகுப்பு மாணவர்களுக்குப் புதியதொரு பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வகையில் சுற்றாடல் புவியியல் (Environmental Geography) என்ற பாடநெறிக்கான உபபாடநூலாக  இந்நூல் வெளிவந்துள்ளது. சூழல், கண்டங்களும் சமுத்திரங்களும், புவியியற் செயற்படும் அகவிசைகள், பாறைகளும் மண்வகைகளும், புறவிசைகள், நீர், வளி ஆகிய ஏழு பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 119685).    

சுற்றாடற் புவியியல்.

க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, திருத்திய இரண்டாம் பதிப்பு, 1999, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1995. (யாழ்ப்பாணம்: டினேஷ் அச்சகம், பருத்தித்துறை வீதி, கல்வியங்காடு).

(5), 266 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 21×14 சமீ.

திருத்திய இப்பதிப்பு, ஸ்ரீலங்கா வெளியீடாக  வெளியிடப்பட்டது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 128529).    

சுற்றாடற் புவியியல்.

க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, திருத்திய 3வது பதிப்பு, 2001, இரண்டாம் பதிப்பு, 1999, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

(6), 216 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ.

திருத்திய இப்பதிப்பு, கொழும்பில் வெளியிடப்பட்டது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 131499).    

சுற்றாடற் புவியியல்.

க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, திருத்திய நான்காம் பதிப்பு, 2007, 3வது பதிப்பு, 2001, 2வது பதிப்பு, 1999, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1995. (அச்சக விபரம் தரப்படவில்லை).

276 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21.5×15 சமீ., ISBN: 955-1013-03-4.

அத்தியாயத் தலைப்புகள் மாற்றப்பட்டு திருத்திய பதிப்பாக 22 ஆண்டுகளுக்குப் பின்னர்  இந்த நான்காம் பதிப்பு வெளிவந்துள்ளது. ஞாயிற்றுத் தொகுதி, புவித் தொகுதி, புவியிற் செயற்படும் அகவிசைகள், பாறை வகைகளும் மண்வகைகளும், புறவிசைகள், நீர், வளி ஆகிய ஏழு இயல்களில் இந்நூல் புதிய பல தகவல்களுடன் வெளிவந்துள்ளது. நூலியல் தகவல் பகுதியில் முதற்பதிப்பு ஜனவரி 1998 என்று குறிப்பிடப்பட்டுள்ளமை தவறாகும். இந்நூலின் முதற்பதிப்பு ஒக்டோபர் 1995இல் வெளிவந்தது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 184505).    

  

ஏனைய பதிவுகள்

Gamble Titanic Slot Totally free

Articles Added bonus Feature: Jacks Attracting Secret Incentive Raffle Bitstarz Internet casino Review Get 252percent Up to 3500, 200 100 percent free Revolves Huff N

14119 கற்பக தீபம்-2014: ஸ்ரீ கற்பக விநாயகர்ஆலய புனராவர்த்தன பிரதிஷடா மகா கும்பாபிஷேக மலர்.

மலர்க் குழு. லண்டன் E17 4SA: ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம், 2-4,Bedford Roard,Walthamstow, 1வது பதிப்பு, ஜுலை 2014. (லண்டன் E17 4SA: JR Print,59-61,Hoe Street). 120 பக்கம், புகைப்படங்கள், விலை: