9859 வட இந்திய பயண அனுபவங்கள்.

தி.ஞானசேகரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).

vii, 114 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-8354-33-9.

ஞானம் பதிப்பகத்தின் 27ஆவது வெளியீடாகவும், 3வது பயண இலக்கியமாகவும் இந்நூல் வெளிவந்துள்ளது. நூலாசிரியர் இந்நூலில் இருவிதமான நோக்கில் நம்மைத் தம்முடன் அழைத்துச் செல்கிறார். ஒன்று அவருடன் உள்நின்று இயங்கும் ஆத்ம ஞானம்.  அவ்வழியில், அவர் பக்திப் பரவசத்துடன் தாம் தரிசித்த தலங்கள் எல்லாவற்றிற்கும் நம்மையும் அழைத்துச் செல்கின்றார். கங்காஸ்நானம், திரிவேணி சங்கம ஸ்நானம், கேதார்நாத், பத்ரிநாத், காசி விசவநாதர் தரிசனம் ஆகியவை பற்றி அவர் விபரிக்கின்றபோது  நாமும் ஸ்நானம் செய்து, தரிசனம்காணும் பேறு பெறும் வகையில் அவர் விபரித்துச் செல்கின்றார். மற்றையது ஒரு யாத்திரிகன் என்ற தளத்தைத் தாண்டி ஒரு படைப்பாளியின் மனோபாவத்துடன் அவர் இவ்விலக்கியத்தைப் படைத்துள்ளார். புராண இதிகாச சம்பவங்களையும் பொருத்தமுற விபரித்துச் செல்லும் அவர்,  செல்லும் வழி, தூரம், பிரயாண ஊடகம், தங்குமிட வசதி, முதலிய விடயங்களையும் ஆங்காங்கே பதிவுசெய்கிறார்.  இப்பயண இலக்கியம் டில்லியையும் அதனைச் சூழவுள்ள வரலாற்று முக்கியத்துவமான இடங்களான தாஜ்மஹால், ஜெய்ப்பூர் அரண்மணை, ஆக்ரா கோட்டை, கிருஷ்ணரின் ஜனனபூமியான மதுரா ஆகிய இடங்கள் பற்றியும்  அங்கே ஆசிரியரின் அனுபவங்களையும் பதிவு செய்கின்றது.

ஏனைய பதிவுகள்

Jogos Online Acessível

Content Star Trek Online Banda 3. Aquele aprestar jogos iOS abicar PC carreiro emulador Você podia jogar em até 6 modos de acabamento diferentes, sendo

Pin Up

Content How To Open A Pin Up Account? acabamento Puerilidade Suporte Do Pin Saiba Como Adaptar Arruíi Aplicativo No Ano Puerilidade Seu Construção Utensílio A

Best The new Zealand Web based casinos 2025

Posts Put Limitations Best Incentives from the The newest Casinos: Types & Advice A knowledgeable web based casinos inside The new Zealand understand why https://www.mutsons.co.ke/%e0%b9%80%e0%b8%9e%e0%b8%a5%e0%b8%b4%e0%b8%94%e0%b9%80%e0%b8%9e%e0%b8%a5%e0%b8%b4%e0%b8%99%e0%b9%84%e0%b8%9b%e0%b8%81%e0%b8%b1%e0%b8%9a%e0%b9%80%e0%b8%81%e0%b8%a1%e0%b8%81%e0%b8%b2%e0%b8%a3%e0%b8%9e/