9881 இன்னொரு நூற்றாண்டுக்காய்.

சாரல்நாடன். கொழும்பு 6: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, ஆனி 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(6), 53 பக்கம், விலை:  ரூபா 75., அளவு: 19×12.5 சமீ.

1920 களில் இலங்கையில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண்ணின் அரசியல் வாக்குரிமைச் சிந்தனைகள் பற்றிக் கூறும் இந்நூலின் நாயகி, நல்லம்மாவை  உரிய முறையில் வெளிக்கொணர சாரல்நாடன் பல தளங்களில் உழைத்துள்ளார். ஆய்வுகள் பல செய்துள்ளார். பெண் வைத்தியராகிய நல்லம்மா பெண்களது வாக்குரிமைக்கு ஏனைய பல பெண்களுடன் இணைந்து ஒத்துழைத்து தீவிரமாகப் போராடியுள்ளார். நல்லம்மா பற்றிய  இந்நூல் இரு பகுதிகளைக் கொண்டது. முதற்பகுதி அவரது கருத்தோட்டத்தில் நல்லம்மாவின் பங்கு எத்தகையது என்பதை விளக்குகின்றது. அறிமுகம், பெண் வைத்தியர், சமுதாயப் பணியில் பெண்கள், மகளிர் வாக்குரிமைச் சங்கம், காலப்பின்னணி, பெண்கள் முன்னேற்றம், சர்வஜன வாக்குரிமை, நிறைவாக, அடிக்குறிப்புகள் ஆகிய தலைப்புகளில் இப்பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.  இரண்டாம் பகுதி பின்னிணைப்பாக, நல்லம்மாவினால் எழுதிப் பிரசுரிக்கப்பட்ட இந்திய இல்வாழ்க்கை, ஸ்திரிகளும் வாக்குரிமைகளும் ஆகிய இரு கட்டுரைகளைக் கொண்டுள்ளது.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18548).

ஏனைய பதிவுகள்

Cop Upouusi Package Slot Trial

Blogit Ero vapaasatamien ja reaalituloisten satamien välillä Pubit ja 7s-esittelykolikkopeli, Of Wazdan Glucose Rush Slot Osta -lisäominaisuus Eye From Horus Megaways -kolikkopelin aihe, rajat, maksut