9883 25,00,000 மக்கள் தலைவர்.

குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் (தொகுப்பாசிரியர்). கண்டி: இரா.கனகரத்தினம், 1வது பதிப்பு, டிசம்பர் 1959. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், 194V, தட்டா தெரு).

(8), 120 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 1.00, அளவு: 21.5×13.5 சமீ.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவுநர் சா.ஜே.வே.செல்வநாயகம் அவர்களின் அரசியல் வாழ்க்கை பற்றிய நூல். சமஷ்டிக் கட்சி அமைத்து வடக்கு கிழக்கு மலையக மக்களை ஒன்றிணைத்து அவர் பெருந்தலைவரான வரலாற்றையும் அவரது அரசியல் நோக்குகளையும், கருத்துகளையும் இத்தொகுப்பு பதிவுசெய்கின்றது. தந்தை செல்வாவின் கருத்துக்களை பல்வேறு உரைகளிலிருந்தும் எடுத்து இந்நூல் தொகுத்து வழங்குகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 5730).

ஏனைய பதிவுகள்

17032 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 16ஆவது ஆண்டு அறிக்கை (1957-1958).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 21, 33ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1958. (கொழும்பு 11: ஸ்டான்கார்ட் பிரின்டர்ஸ் லிமிட்டெட், 196, செட்டியார் தெரு).