9889 சட்ட வல்லுநர் செ. இரங்கநாதன் கியூ.சீ. அவர்களின் பன்முகப் பணிகள்.

இ.க.கந்தசுவாமி. கொழும்பு 6: இ.க.கந்தசுவாமி, 7. 57ஆம் ஒழுங்கை, 1வது பதிப்பு, மாசி 2001. (கல்கிஸ்ஸை: ஐடியல் பிரின்ட்).

16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.

சட்ட வல்லுநர் அமரர் செ.இரங்கநாதன் அவர்களின் பன்முகப் பணிகளை நினைவுகூர்ந்து அவரைப் பாராட்டும் வகையில் தமிழவேள் கந்தசுவாமி (கொழும்புத் தமிழ்ச்சங்கச் செயலாளர்) அவர்கள் எழுதிய சிறுநூல் இது. 9.2.2001 அன்று அவரது உருவப்படம் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்ட போது இந்நூல் வெளியிடப்பட்டது. அமரர் இரங்கநாதன் கொழும்பு இராமகிருஷ்ண சங்கத்தின் முகாமைத்துவ சபையின் உறுப்பினராகப் பல ஆண்டுகள் சேவையாற்றியதுடன், கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சிக்கும் அரிய பங்காற்றியுள்ளார். சட்டத்துறையில் பல்வேறு குழுக்களிலும் அங்கம் வகித்த இவர் தமிழ்மொழி, சமயம், கல்வி, சமூக சேவை ஆகிய துறைகளில் ஆற்றிய சேவைகள் இந்நூலில் நினைவுகூரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

8051 உளவியல் ஊடுதலையீடுகள்.

சபா.ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்). vi, 110 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: