9890 ஐக்கியதீபம்: வீரசிங்கம் நினைவு மலர்.

து.சீனிவாசகம் (ஆசிரியர்). யாழ்ப்பாணம்: வடபகுதி ஐக்கிய மேற்பார்வைச் சபை வெளியீடு, வட பகுதி கூட்டுறவுச் சம்மேளனம், பிரதான வீதி, 1வது பதிப்பு, ஐப்பசி 1965. (யாழ்ப்பாணம்: வட மாகாண கூட்டுறவு அச்சகமும் வெளியீட்டுச் சபையும்).

32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5×20.5 சமீ.

வடபகுதி கூட்டுறவுச் சம்மேளனத்தின் அதிகாரபூர்வ வெளியீடான ஐக்கிய தீபம் சஞ்சிகை, தனது இதழொன்றினை (மலர் 21, இதழ் 2, ஐப்பசி 1965) கூட்டுறவுத் தந்தை அமரர் வி.வீரசிங்கம் (7.7.1892-5.12.1964) அவர்களின் நினைவு மலராக வெளியிட்டிருந்தது. வடபகுதி ஐக்கிய மேற்பார்வைச் சபையைத் தோற்றுவித்து அதன் தலைவராக தன் இறுதிக்காலம் வரை 27 ஆண்டுகள் சேவையாற்றியவர். கூட்டுறவு இயக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்த இவரது சேவைத்திறனை அறிந்த கூட்டுறவாளர்கள் 21.5.1955இல் அகில இலங்கைக் கூட்டுறவுச் சம்மேளனத்தை நிறுவியபோது அதன் முதலாவது தலைவராக நிமித்தனர். இவர் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபராக 30 ஆண்டுகள் பணியாற்றியவர். அனுதாபச் செய்திகளுடன் அமரர் வீரசிங்கம் பற்றிய கவிதைகள், கட்டுரைகள் என்பன இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

11407 தமிழ் மொழிப் பயிற்சியுந் தேர்ச்சியும்: முதற் புத்தகம்.

தி.சதாசிவ ஐயர். சுன்னாகம்: வட-இலங்கைத் தமிழ் நூற் பதிப்பகம், 14வது பதிப்பு, பெப்ரவரி 1954, 1வது பதிப்பு, டிசெம்பர் 1939. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). viii, 126 பக்கம், விளக்கப்படம், சித்திரங்கள், விலை: ரூபா