விழா ஏற்பாட்டுக் குழு. இலங்கை: கலை கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை).
iv, 38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் சி.மௌனகுரு, ஒப்பீட்டுச் சமயத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அருட்தந்தை கலாநிதி டொமினிக் சாமிநாதன் ஆகிய இருவருக்கும் மேற்படி பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தினர் சேவைநலன் பாராட்டு விழாவொன்றினை 2012இல் நடத்தினர். அதையொட்டி வெளியிடப்பெற்ற இம்மலரில், உபவேந்தர், பீடாதிபதி ஆகியோரின் வாழ்த்துச் செய்திகளும், “பேராசிரியர் சி.மௌனகுருவும் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அவரது தடங்களும்” (பேராசிரியர் செ.யோகராசா), “அருட்தந்தை கலாநிதி டொமினிக் சுவாமிநாதன் அடிகள்” (ரூபி வலன்ரினா) ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. விழா ஏற்பாட்டுக் குழுவில் ம.வர்ணகுலசிங்கம், பே.சச்சிதானந்தம், வ.இன்பமோகன், அருட்தந்தை அ.அ.நவரெட்ணம், க.சுரேஷ், கு.ரவிச்சந்திரன், எஸ்.சந்திரகுமார், எம்.சிவாஜி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.