9898 பேராசிரியர் அல்லாமா உவைஸ் (இலங்கைத் தமிழ்ச் சுடர்மணிகள் வரிசை இல. 19).

எஸ்.எச்.எம்.ஜெமீல். கொழும்பு  6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

56 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-408-9.

இலங்கையின் தமிழ்ச் சுடர்மணிகள் வரிசையில் 19ஆவது நூலாக 20ம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த மறுமலர்ச்சிச் சிந்தனையாளரும் தமிழறிஞருமான பேராசிரியர் அல்லாமா மகுமூது லெவ்வை முகம்மது உவைஸ் (1922-1996) அவர்களின் வாழ்வும் பணிகளும் இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.  ஆரம்பம், ஆரம்பக் கல்வி, உயர் கல்வி, ஆய்வுகள், இஸ்லாமியத் தமிழ் இலக்கியம், நல்லதொரு குடும்பம், பல்கலைக்கழகப் பணி, நூல்வெளியீடுகள், என்றும் நிலைத்திடும் பணி ஆகிய 9 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக, பேராசிரியர் உவைஸ் வாழ்வில் முக்கிய திகதிகள், பேராசிரியர் உவைஸ் எழுதிய, பதிப்பித்த, மொழிபெயர்த்த நூல்கள், பேராசிரியர் உவைஸ் பற்றிய நூல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்