9905 அரியாலையூர் நாடக ஆளுமைகள்.

ப.ஸ்ரீஸ்கந்தன். சென்னை 26: வடலி வெளியீடு, 8V, அழகிரி நகர் 4வது தெரு, லட்சுமிபுரம், வடபழநி, 1வது பதிப்பு, அக்டோபர் 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).

128 பக்கம், புகைப்படங்கள், அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-0-9919755-1-8.

நடிப்பு, எழுத்துருவாக்கம், நெறியாழ்கை, பத்திரிகை எழுத்தாளர், பன்னூலாசிரியர் , நிகழ்ச்சித் தொகுப்பாளர் போன்ற பல்துறை ஆற்றல் கொண்டவர் ப.ஸ்ரீஸ்கந்தன். யாழ். பரியோவான் கல்லூரியின் பழைய மாணவர். தற்போது கனடாவில் வங்கி ஒன்றின் முகாமையாளராகப் பணியாற்றுகின்றார். அரியாலையூரைத் தளமாகக் கொண்டு உருவாகி வளர்ந்த நாடக ஆளுமைகள் பலரை இந்நூலில் இனம்கண்டு அவர்கள் பற்றிய பல தகவல்களைப் பதிவுசெய்திருக்கிறார். கலைஞானச்சுடர் வே.க.சண்முகராசா, கலைஞன் ஐ.எஸ்.சண்முகநாதன், கலைஞானபூபதி இ.கே.குமரையா, சங்கீதபூஷணம் சபாபதிப்பிள்ளை பாலசிங்கம், சாண்டோ மாஸ்டர் ஆசிரியர் சதாசிவம், பழம்பெரும் கலைஞன் இராமநாதன், சோகசோபித சொர்ணக் கவிக்குயில் இரத்தினம், அரியாலையூர் வே. ஐயாத்துரை, இசை நாடகக் கலைஞன் அரியாலையூர் செல்வம், நடிக மன்னன் பி.சண்முகலிங்கம், உங்களில் ஒருவன் லோகேஸ், கலைஞன் ந.கிருஷ்ணசிங்கம், கலைஞன் அருட்பிரகாசம், கலைமன்னன் பொ.விஜயரட்ணம், கலைக்குரிசில் வி.ரி.ஏ. விஸ்வா, கலைப்பரிதி அரியாலை ச.உருத்திரேஸ்வரன், நவரச நாயகன் அடங்காப்பிடாரி என்.ரி.குணம், க.பாலேந்திரா, பொப்பிசைத் திலகம் எஸ்.இராமச்சந்திரன், கலைஞர் இராமநாதன் சடகோபன், இயக்குநர் ந.கேசவராஜ், கலைஜோதி அ.சந்திரகுமார், நாடக எழுத்தாளர் க.நேமிநாதன், தோழர் பொ.தர்மலிங்கம், நவரட்ணம் ஆகிய ஆளுமைகள் பற்றி தனித்தனியாக பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் இறுதி அத்தியாயத்தில் ‘நாடக ஆளுமைகள்” என்ற தலைப்பின்கீழ் அப்பிரதேச அரங்கியல்சார்ந்த வரலாற்று நிகழ்வுகளின் குறிப்புக்கள் தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  234384. கொழும்புத் தமிழ்ச்சங்கத்திலும் பதிவில் உள்ளது. பதிவிலக்கம் 61518). 

ஏனைய பதிவுகள்

Sol Casino Bonus

Content Bedingungen Zur Nutzung Des Angebots: Casino lucky247 Bewertung Wie Bekomme Ich Den Platin Casino Bonus Ohne Einzahlung? Spin Casino Monatliche Oder Tägliche Freispiele Für