9910 இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத்துத் தமிழ்ப் புலவர் வரலாறு (இரண்டாம் பாகம்).

சி.அப்புத்துரை. இலங்கை: தெல்லிப்பழைக் கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2008. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).

312 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 800., அளவு: 18.5×13 சமீ., ISBN: 978-955-50192-8-6)

20ம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் இறுதிவரை வாழ்ந்த ஈழத்துத் தமிழ்ப் புலவர்களின் வாழ்க்கைச் சரிதத்தை ஆண்டுரீதியாக வரிசைப்படுத்தி அவர்களின் இலக்கியப்பணி பற்றிய முழுமையான தகவல்களை வரலாற்றுக் குறிப்புகளுடன் இந்நூல் தருகின்றது. இணுவை அம்பிகைபாகர், வேலணை கந்தப்பிள்ளை, புலோலியூர் நா.கதிரைவேற்பிள்ளை, மாதகல் ஏரம்பையர், புலோலியூர் முத்துக்குமாரசுவாமிக் குருக்கள், அக்கரைப்பற்று தாண்டவர் வேலன், நல்லூர் சிற். கையலாயபிள்ளை, அச்சுவேலி தம்பிமுத்துப் புலவர், உடுப்பிட்டி ஆறுமுக உபாத்தியாயர், புலோலி வ.குமாரசுவாமிப் புலவர், மல்லாகம் நமச்சிவாயப் புலவர், கொக்குவில்  கணபதிப்பிள்ளைச் சட்டம்பியார், சாவகச்சேரி பொன்னம்பலபிள்ளை, திருகோணமலை த.கனகசுந்தரம்பிள்ளை, நீர்வேலிச் சிவப்பிரகாச பண்டிதர், சரவணை ம.தம்பு உபாத்தியாயர், திருகோணமலை த.சரவணமுத்துப் பிள்ளை, வேலணை க.இராமலிங்கம்பிள்ளை, சொற்கலைப் புலவர் சுவாமி ஞானப்பிரகாசர், மதுரகவிப் புலவர் சூசைப்பிள்ளை, நவாலியூர் க.சோமசுந்தரப் புலவர், தென்கோவை கந்தையாபிள்ளை, அப்துல் மஜீதுப் புலவர், யாழ்ப்பாணம் சுவாமிநாத பண்டிதர், வேலணை தில்லைநாதப் புலவர், அக்கரைப்பற்று முஹமத் காசிம் ஆலிம், கச்சாயூர் புலவர் சின்னையனார், செந்தமிழ்க் கவிஞர் சு.நடேசபிள்ளை, பேராசிரியர் கணபதிப்பிள்ளை, கரணவாய் செவ்வந்திநாத தேசிகர், மூதூர் உமறு நெய்நாப் புலவர், நவாலியூர் சோ.இளமுருகனார், வேலணைப் பண்டிதர் பொ.ஜெகந்நாதன், நயினாதீவு கு.ப.சரவணபவன், வித்தியாரத்தினம் சோ.நடராசா, விழிசிட்டிச் சிவசுப்பிரமணியம், கவிஞர் சேக்க மரைக்கார், வன்னியூர்க் கவிராயர், மகாகவி து.உருத்திரமூர்த்தி, கவிஞர் புரட்சிக்கமால்,  கவிஞர் சௌகத் கமால் ஆகிய 41 பேர் பற்றிய வாழ்க்கைக் குறிப்பினை இந்நூல் சிறப்பாகப் பதிவுசெய்கின்றது. மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலயத்தின் அதிபராக இருந்த பண்டிதர் அப்புத்துரை, 1964இல் மழலைச் செல்வம் என்ற சிறுவர் பாடல் தொகுப்பை முதலாவதாக வெளியிட்டார். இதுவரை 30க்கும் அதிகமான நூல்களை இவர் எழுதி வெளியிட்டிருக்கிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 219432. இந்நூலின் முதலாம் பாகத்திற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 4885)

ஏனைய பதிவுகள்

Offlin Gokhal, Sports Betting and Poker Games

Capaciteit Turbo Play gokkast: Battle Royale Poker Veelgestelde Behoeven Gokbedrijven getroffen gedurende Microsoft-storing; geen tussenstappen bij Nederlandse offlin casino’su Boekbespreking vanuit 888casino Nederlan CasinoNieuws verwachten