9925 மறுமலர்ச்சி தந்த பஞ்சாட்சரம்.

ப.சிவானந்த சர்மா (தொகுப்பாசிரியர்). சுன்னாகம்: சர்வானந்தமய பீடம், இணுவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013.(இணுவில்: கஜானந்த் பிறின்டேர்ஸ், மானிப்பாய் வீதி).

152 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 400., அளவு: 25×17.5 சமீ.

அமரர் பிரம்மஸ்ரீ ச.பஞ்சாட்சர சர்மா அவர்கள் இலங்கையின் ஆரம்பகாலச் சிறந்த சஞ்சிகையான மறுமலர்ச்சியின் ஆசிரியராக இருந்தவர். அவரது வாழ்க்கை வரலாறு, பணிகள், ஆக்கங்கள், வம்ச வரலாறு யாவற்றையும் இந்நூலில் தொகுத்துத் தந்திருக்கிறார் அவரது மகனான கோப்பாய் சிவம் (ப.சிவானந்த சர்மா). பிரம்மஸ்ரீ பஞ்சாட்சர சர்மாவின் 50 ஆக்க இலக்கியக் கட்டுரைகள், அவர் பற்றிய பிற அறிஞர்களின் விதப்புரைகள், அவரது ஆக்க முயற்சிகளின் பட்டியல், சமூகப் பங்களிப்புகள், அவருக்குப் பிரமுகர்கள் எழுதிய கடிதங்கள் போன்றவையும் இந்நூலில் அடங்கியுள்ளன.

ஏனைய பதிவுகள்

16837 தாயகக் கனவுகள் : பிரதிகளை முன்வைத்து ஓர் உரையாடல்.

அருண்மொழி வர்மன் (இயற்பெயர்: சுதர்சன் ஸ்ரீநிவாசன்). கனடா: வடலி வெளியீடு, இல. 35, Long Meadow Road, Brampton, Ontario L6P 2B1, 1வது பதிப்பு, தை 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை). xix,