9927 வாரித் தமிழ் வழங்கும் வள்ளல் பண்டிதர் மு.ஆறுமுகன் நூற்றாண்டு விழா மலர் 1914-2014.

தமிழரசி சிவபாதசுந்தரம் (பதிப்பாசிரியர்). லண்டன்: தமிழரசி சிவபாதசுந்தரம், Elms Gardens, Harrow, HAO 2RU, 1வது பதிப்பு, 2014. (லண்டன்: ஜே.ஆர். அச்சகம்).

224 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.

பண்டிதர் மு.ஆறுமுகனார் அவர்களின் நூற்றாண்டு நினைவாக அவரது மகளான தமிழரசி சிவபாதசுந்தரம் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள மலர். தொடுத்த முத்துக்கள் என்ற பிரிவில் பண்டிதர் மு.ஆறுமுகன் எழுதிய 30 கட்டுரை, பாமலர்ப் படைப்புக்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. பண்டிதர் மு.ஆறுமுகனார் பற்றிப் பல்வேறு அறிஞர்களும் வழங்கிய கருத்துக்கள் 23 தலைப்புக்களில் இரண்டாவது பிரிவில் இடம்பெற்றுள்ளன. பண்டிதர் ஆறுமுகனார் புங்குடுதீவின் முதற் பண்டிதர் என்ற பெருமைக்குரியவர். புங்குடுதீவின் முத்துடையார் வழித்தோன்றலான நீலயினார் முத்துக்குமார் அவர்களுக்கும் ஆறுமுகம் நாகம்மை அவர்களுக்கும் ஐந்தாவது மகனாக 12.3.1914இல் பிறந்தவர். தனது 18ஆவது வயதில் 1932இல் பயிற்சிபெற்ற ஆசிரியரானவர். அவரது வாழ்வும் பணியும் இந்நூலின் படைப்புக்களின் வாயிலாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

13737 மருத மைந்தனின் சங்கமம்.

மருத மைந்தன் (இயற்பெயர்: சாஹூல் ஹமீத்). காத்தான்குடி: நவ இலக்கிய மன்றம், 1வது பதிப்பு, 1996. (சென்னை 600001: மில்லத் பிறின்டர்ஸ், 16, அப்புமேஸ்திரி தெரு). 95 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12

Free Spins No deposit 2024

Posts Totally free Revolves No deposit Bonuses Inside the Canada 2024 Better Casinos To own Added bonus Spins Simple tips to Compare No deposit 100