கார்த்திகேசன் கமலநாதன்.சாவகச்சேரி: தபனியா வெளியீட்டகம், தபனி வாசா, மீசாலை கிழக்கு, மீசாலை, 1வது பதிப்பு, பங்குனி 2009. (சாவகச்சேரி: ஆதவன் பக்க வடிவமைப்பு, ஐயா கடையடி, சாவகச்சேரி வடக்கு).
xvi, 104 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 20×14.5 சமீ.
யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி வரலாற்று ஆசிரியரான சைவப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர் சி.கா.கமலநாதன், தென்மராட்சி வரணி மாசேரிக் கிராமத்தில் 29.9.1971இல் பிறந்தவர். 1991இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையில் இணைந்து பட்டம் பெற்றவர். ஐரோப்பிய நாடுகளையும், அந்நாடுகளுடன் தொடர்பான நதிகள், கடல்களையும் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை இந்நூல் 75 தலைப்புகளின்கீழ் தாங்கி வெளிவந்துள்ளது. நெதர்லாந்து, நேப்பிள்ஸ், பசுபிக் சமுத்திரம், சுவீடன், உரோம் எனத் தொடரும் தலைப்புக்களின் கீழ் இத்தகவல்கள் பதியப்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 205684).