9929 இலங்கைச் சுருக்க வரலாறு: கி.மு.6ஆம் நூற்றாண்டு முதல் 2007 வரை.

கந்தையா குணராசா, கமலா குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 75/10A,  பிறவுன் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2008. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

vi, 340 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-1624-06-4.

இலங்கைச் சுருக்க வரலாறு: கி.மு.6ஆம் நூற்றாண்டு முதல் 2007 வரை.

கந்தையா குணராசா, கமலா குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 75/10A,  பிறவுன் வீதி, 2வது பதிப்பு, ஜுலை 2013, 1வது பதிப்பு, ஏப்ரல் 2008. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

vi, 368 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 650., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-1624-06-4.

இலங்கையின் வரலாற்றை ஆதிக் குடியேற்றங்களிலிருந்து தொடங்கி இந்நூலில் எளிய நடையில் வழங்கியுள்ளார்கள் செங்கை ஆழியான் க.குணராசாவும் அவரது துணைவியாரும். சிங்கள மக்களின் வரலாற்றைக்கூறும் ஆவணங்களான மகாவம்சம், சூளவம்சம் மற்றும் இது சார்ந்த ஏனைய இலக்கியப் பனுவல்களும், யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றை விபரிக்கும் யாழ்ப்பாண வைபவ மாலை, வையாபாடல் என்பனவும், முத்துத்தம்பிப்பிள்ளை முதலாக சுவாமி ஞானப்பிரகாசர் வரை ஆக்கிய வரலாற்று நூல்களும், நவீன வரலாற்று ஆசிரியர்களது கருத்துக்களும் கவனத்திற்கு எடுக்கப்பட்டு இலங்கைச் சுருக்க வரலாறு ஆக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஆதிக் குடிகளும் ஆரம்பக்குடியேற்றங்களும், இலங்கையின் வரலாற்று உதயகால மன்னர்கள், இலங்கையின் புகழ்பூத்த மன்னன் தேவநம்பியதீசன், சேனன், குத்திகன், எல்லாளன்-தமிழ் மன்னர்களின் ஆட்சி, துட்டகாமினி மன்னன், துட்டகாமினிக்குப் பின்னர், மகாசேனன், ஸ்ரீமேகவண்ணன், தாதுசேனனும் காசியப்பனும், அக்கபோதி மன்னர்கள், மானவர்மன் பரம்பரையினரின் ஆட்சி, உத்தரதேசமும் உக்கிரசிங்கனும், ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் ஆட்சியும் அதன் பின்னரும், சோழராட்சியில் இலங்கை, விஜயபாகு மன்னன், மகா பராக்கிரமபாகு, நிசங்கமல்லன், கலிங்கத்து மாகன், யாழ்ப்பாண இராஜதானி, தென்புலம் பெயர்ந்த தலைநகர்கள், கோட்டை இராஜதானியும் கண்டி இராஜதானியும், போர்த்துக்கேயர் காலம், ஒல்லாந்தர் காலம், ஆங்கிலேயர் காலம், சுதந்திர இலங்கை ஆகிய 25 அத்தியாயத் தலைப்புகளில் இந்நூல் விரிகின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18264).

ஏனைய பதிவுகள்

Betting Fruit Zen real money

Posts And therefore Online casino games Appear in Maryland? Should i Play Casino games Inside the Massachusetts 100percent free Or A real income? Keno Playing