9948 இலங்கை அரசியல் வரலாறு: ஒரு நோக்கு.

சிவா சுப்பிரமணியம். கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, மார்ச் 2013. (கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 202, செட்டியார் தெரு).

iv, 57 பக்கம், விலை: ரூபா 225., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-9396-58-1.

சுதந்திர இலங்கையில் இடம்பெற்ற பண்டா-செல்வா ஒப்பந்தம், இந்திய வம்சாவளியினரின் பிரஜாவுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டமை,  சோல்பரி அரசியலமைப்பின் 29வது சரத்தின் நீக்கம் போன்ற பிரதான நிகழ்வுகள் பற்றிய இன்றைய சந்ததியினர் முழுமையாகத் தெரியாதவர்களாக இருக்கும் குறைபாட்டை நீக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்ட ஐந்து கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. தமிழ் மக்களின் விமோசனத்திற்கு புதிய பாதை என்ற கட்டுரை தவிர எஞ்சியவை தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமானவை. நூலாசிரியர் ஒரு மூத்த ஊடகவியலாளர். இடதுசாரிச் சிந்தனை இயக்கம் சார்ந்த பின்புலத்தில் வளர்ந்து வந்தவர்.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 234773).

ஏனைய பதிவுகள்

13954 மாக்சிசப் பார்வையில் இலங்கைச் சரித்திரம்.

நா.சண்முகதாசன். யாழ்ப்பாணம்: நா. சண்முகதாசன், 1வது பதிப்பு, 1972. (யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண அச்சகம், 93, ஸ்ரான்லி வீதி). 128 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 20.5×13.5 சமீ. நா.சண்முகதாசன் என அழைக்கப்படும் நாகலிங்கம்