9973 மலையக அரசியல் செல்நெறியும் மலையக மக்களும்.

சுகுமாரன் விஜயகுமார். கொழும்பு: அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு, 1வது பதிப்பு. 2013. (கொழும்பு 6: ஸ்ரீ டிஜிட்டல் பிரஸ்).

54 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

24.8.2013இல் நிகழ்த்தப்பட்ட அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்த பதினான்காவது நினைவுப் பேருரை இதுவாகும். இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த சுகுமாரன் விஜயகுமார் ஒரு சமூக விஞ்ஞான ஆய்வாளராவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானச் சிறப்புப்பட்டம் பெற்றவர். 60களில் ஹட்டன் பிரதேசத்தை மையமாகக் கொண்டு மலையகத்தில் ஏற்பட்ட சமூக பண்பாட்டு விழிப்புணர்ச்சிக்கும் கல்வி மீது ஏற்பட்ட ஆர்வத்திற்கும் அடித்தளமாக நின்றவர் அமரர் இர.சிவலிங்கமாவார். அவரது பெயரில் நிகழ்த்தப்பெறும் இவ்வாய்வுரை அறிமுகம், மலையக  மக்களா அல்லது இந்திய மக்களா?,பிரித்தானியர் இலங்கையில் ஏற்படுத்திய மாற்றங்களும் மலையகத் தொழிலாளர்கள் வருகையும், 1931ஆம் ஆண்டுவரையான இந்தியர்களின் அரசியலும் நடேசையரின் பணிகளும், மலையகத் தமிழரின் அரசியல் எழுச்சியின் படிகள்: 1931-1947, சர்வசன வாக்குரிமையும் மலையக மக்களின் அரசியலும், வாக்குரிமையின் விளைவுகள், வாக்குரிமை பறிப்பின் தொடக்கம், இலங்கை இந்திய காங்கிரஸ் யாருக்கானது?, சோல்பரி குழுவும் மலையக மக்களும், சுதந்திர இலங்கையும் மலையக மக்கள் மீதான ஒடுக்கு முறைகளும் 1947-1971, பிரஜாவுரிமை மறுப்பும் அதற்கு எதிரான போராட்டங்களும், தொழிற்சங்கங்களும் மலையக அரசியலும்; 1947-1977, இடதுசாரி அரசியலும் மலையகமும் 1947-1977, தொண்டமானின் தொழிற்சங்க இராச்சியம் ஐக்கிய தேசியக் கட்சி வசமாதல், மலையக தேசியத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும், தொழிற்சங்க வாதம், தேசியவாதம் மற்றும் பாராளுமன்றவாதம்: 1993இல் இருந்து இன்றுவரை, இன்றைய மலையகமும் எதிர்கால மலையகமும், முடிவுரை ஆகிய உபதலைப்புகளில் விரிந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

10910 சூரியப் புதல்வர்கள்: மாவீரர் காவியச் சோலை: தொகுதி 2.

முருகர் குணசிங்கம் (தொகுப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: எம்.வி.வெளியீடு, தென் ஆசியவியல் மையம், தபால் பெட்டி எண். 5317, சுலோறா, சிட்னி, நியு சவுத் வேல்ஸ் 2190, 1வது பதிப்பு, வைகாசி 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).