நிவேதா உதயராயன். சென்னை: கிரீன் புக்ஸ், 8V, அழகிரி நகர் 4வது தெரு, லட்சுமிபுரம், வடபழநி, 1வது பதிப்பு, 2014. (சென்னை:அச்சக விபரம் தரப்படவில்லை).
64 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 21.5×14 சமீ.
சுமேரியர் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுவரும் நூலாசிரியர், யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிடமாக் கொண்டவர். 1985இல் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து, கடந்த 18 ஆண்டுகளாக ஜேர்மனியிலும், பின்னர் லண்டனில் வாழ்ந்துவருபவர். 14 ஆண்டுகளாக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டறை ஆசிரியராகவும் தமிழ்ப்பள்ளி அதிபராகவும் சேவையாற்றுபவர். வரலாறு என்றால்/எதைப்பற்றி எழுதுவது வரலாறு?/மாந்த வரலாறு/பனிக்காலமும் மாந்த இடப்பெயர்வும்/ மெசொப்பொத்தேமியா/விவசாயம்/பொறிமுறையாக்கப்பட்ட நீர்ப்பாசனம்/ கட்டடக்கலை/ சீகுராட்/ கூனிபோம் எழுத்து வடிவம்/இயற்கை வழிபாடு/ சுமேரியர் இடப்பெயர்வு/சிந்துவெளி நாகரீகம்/ சுமேரியர் தான் தமிழர் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.