9977 விபுலாநந்த அடிகளும் முஸ்லிம்களும்.

ஏ.பீர்முகம்மது. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

viii, 64 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-413-3.

விபுலாநந்த அடிகளார் முஸ்லிம்களின் அறிவுசார் விடயங்கள் பலவற்றில் மிகவும் அக்கறை கொண்டவராயிருந்தார். அவர்களது கல்வி நிலையை மேம்படுத்துதல், அறபு-தமிழ் அகராதியொன்றைத் தயாரித்தல், நாட்டுப்புறப்பாடல்களைப் பாதுகாத்தல்,  என்பன அவற்றுள் முக்கியமானவையாகும். அவர் வலியுறுத்திய தமிழ்-முஸ்லிம் இனங்களுக்கிடையிலான உறவின் அவசியத்தை இந்நூலில் ஆசிரியர் நிறுவமுனைகின்றார். விபுலாநந்தரின் பன்முக ஆளுமை, அடிகளார் பற்றி, பேராசிரியர் கா.சிவத்தம்பியின் பார்வையில் அடிகளார், அடிகளாரை அண்மித்திருந்த சூழல், கிழக்கிலங்கையும் அரசியல் நிலைப்பாடுகளும், விபுலாநந்தரின் வாழ்வுமுறை, சிவாநந்தா வித்தியாலயம், அடிகளாரிடம் பாடங்கேட்ட முஸ்லீம்கள், நட்புறவும் சமூகத் தொடர்பும், அறிஞர் அஸீஸ் அவர்களின் அநுபவப் பகிர்வு, அடிகளாரும் அறபு மொழியும், விபுலாநந்தர் காலத்து முஸ்லிம் பிரபலங்கள், அவிழ்க்கப்படாத முடிச்சு, நிரூபிக்கப்பட்ட ஆளுமை, இலங்கையில் இறுதியாகக் கலந்துகொண்ட பொது நிகழ்வு, முடிவல்ல-தொடரவேண்டிய பெரும்பணி ஆகிய 16 தலைப்புகளில் இவ்வாய்வு விரிகின்றது. நூலாசிரியர் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் மாணவர். அதே கல்லூரியில் கணித விசேட ஆசிரியராயும், அதிபராயும் பணியாற்றியவர். கல்விப் பணிப்பாளராக ஓய்வுபெற்றவர்.

ஏனைய பதிவுகள்

Hellraiser Gokkast Optreden

Grootte Spelletjes Gokhal Ideal Gokhuis No Account Hellraiser Gokkas Online Noppes Anga Voor de radicaal evenzeer heffinge waarderen de panel, rappe stortingen en uitbetalingen. Als

Finest 10 Minimal Put Casinos 2024

Articles Greatest 10 Lowest Deposit Casinos Inside the The newest Zealand Can get Simple tips to Allege Same Day Earnings From the Web based casinos: