9996 அயலகத் தமிழ் இலக்கியம்: இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தமிழ்ச் சிறுகதைகள், கவிதைகள்- ஒரு தொகுப்பு.

சா.கந்தசாமி. (தொகுப்பாசிரியர்). இந்தியா: சாகித்திய அகடெமி வெளியிடு, இரவிந்திர பவன், 35, பெரோஸ்ஷா சாலை, புது டில்லி 110001, 1வது பதிப்பு, 2004. (சென்னை 14: வெங்கடேஸ்வரா ஆப்செட் பிரிண்டர்ஸ்).

328 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 22.5×15 சமீ., ISBN: 81-260-1717-1.

இந்திய, மலேசிய ஈழத்து எழுத்தாளர்களின்  தேர்ந்த சிறுகதை, கவிதைப் படைப்புக்களைத் தாங்கி வெளிவந்திருக்கும் இந்திய நூல் இது. இலங்கைப் படைப்பாளிகளான இலங்கையர்கோன் (சக்கரவாகம்), வ.அ.இராசரத்தினம் (தோணி), கே.டானியல் (கொடும்பாவி), எஸ்.பொன்னுத்துரை (அணி), மு.தளையசிங்கம் (இரத்தம்), க.சட்டநாதன் (உலா), செ.கணேசலிங்கன் (அக்காவிற்கு அன்பளிப்பு), டொமினிக் ஜீவா (பாதுகை), செ.யோகநாதன் (பூங்கோதை), சாந்தன் (குயில் வீடு), மாத்தளை சோமு (சொந்த சோதரர்கள்), ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (அவன் ஒரு இனவாதி), குமார் மூர்த்தி (பயணம்), அ.முத்துலிங்கம் (வடக்கு வீதி), உமா வரதராஜன் (மாலைசூடிகள்), அந்தனி ஜீவா (புருட் சலட்) ஆகிய 16 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் மலேசியப் படைப்பாளிகளான சை.பீர்முகம்மது, ரெ.கார்த்திகேசு, வீ.செல்வராஜ், சாமி மூர்த்தி, மா.சண்முகசிவா, அரு.சு.ஜீவானந்தன் அகியோரது கதைகளும், சிங்கப்பூர் படைப்பாளிகளான சே.வெ.சண்முகம், புதுமைதாசன், இராம கண்ணபிரான், நா.கோவிந்தசாமி, உதமான் கனி, மா.இளங்கண்ணன் ஆகியோரது  கதைகளும் இடம்பெற்றுள்ளன. கவிதைகளைப் பொறுத்தவரையில் மஹாகவி (தேரும் திங்களும்), முருகையன் (அகிலத்தின் மையங்கள்), நீலாவ(ண்)ணன் (துயில்), தர்மு சிவராம் (விடிவு முதலிய கவிதைகள்), வ.ஐ.ச.ஜெயபாலன் (நெடுந்தீவு ஆச்சிக்கு), அ.யேசுராஜா (அறியப்படாதவர்கள் நினைவாக), சேரன் (இரு காலைகளும் ஒரு பின்னிரவும்), எம்.ஏ.நுஃமான் (புகைவண்டிக்காகக் காத்திருத்தல்), சி.சிவசேகரம் (பயணம்), கி.பி.அரவிந்தன் (இருப்பிடம் தேடி), சிவரமணி (எனது விடுதலை), இளவாலை விஜயேந்திரன் (இறப்பதெப்படி), சு.வில்வரத்தினம் (இயற்கையால் எழுதியது), சோலைக்கிளி (வானம்பூட்டி), அர்ச்சுனா (ஒரு அகதி விண்ணப்பம்), தமயந்தி (நீ நான் நமது கனவு) ஆகியோரது கவிதைகளும், மலேசியக் கவிஞர்களான இராஜகுமாரன், எம்.கே.அகமது கபீர், கரு.வேலுசாமி ஆகியோரின் கவிதைகளும், சிங்கப்பூர் கவிஞர்களான லதா, கனிமொழி ஆகியோரின் கவிதைகளும் இத்தொகுப்பில் இடம்கொண்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 185462).

ஏனைய பதிவுகள்

12571 – மாணவர் மஞ்சரி (Student’s Bouquet of Verses in Tamil).

அ.ஜே.ஷாவ்றர். கொழும்பு: அ.ஜே.ஷாவ்றர், தலைமைத் தமிழ்ப் பண்டிதர், பரி.தோமஸ் கலாசாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 1933. (அச்சக விபரம் தரப்படவில்லை). xx, 163 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 18×12.5 சமீ. ‘திரு