9997 இலங்கைப் பயணக்கதை: இதயம் பேசுகிறது.

மணியன். சென்னை 14: மணியன் பதிப்பகம், 7, ஹனுமந்தராவ் ரோடு, பாலாஜி நகர், 1வது பதிப்பு, ஏப்ரல் 1979. (சென்னை: தி இதயம் பிரின்டர்ஸ்).

120 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 5.00, அளவு:  20.5×13.5 சமீ.

ஆனந்த விகடன் வார இதழில் தொடராக வெளிவந்த மணியனின் இலங்கைப் பயணக்கதையின் நூல்வடிவம். இலங்கை பற்றியும் இலங்கைத் தமிழர் பற்றியும் தமிழகப் பத்திரிகைகள், ஊடகங்கள் பாராமுகமாக இருந்த  70களின் நடுக்கூறுகளில் துணிச்சலுடன் இலங்கைத் தமிழர் பற்றி எழுதி உலக அரங்கில் அவர்கள் பற்றிய தேடலை உருவாக்கியவகையில் இந்நூல் முக்கியத்துவம் பெறுகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 44520).

ஏனைய பதிவுகள்

9714 விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது  விலங்கு நடத்தைகள்.

A.M.ரியாஸ் அஹமத்.  கொழும்பு 2: மூன்றாவது மனிதன் பதிப்பகம், 37/14 வொக்சோல் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜனவரி 2002. (அச்சக விபரம் தரப்படவில்லை). xi, 128 பக்கம், விலை: ரூபா 160., அளவு: 21.5×14.5