9999 ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாட்டு மலர்.

மலர்க் குழு. தஞ்சாவூர்: உலகத் தமிழர் பேரமைப்பு, 1வது பதிப்பு, மார்கழி 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை).

520 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 200., அளவு: 27.5×20.5 சமீ.

2009 டிசம்பர் 26. 27ம் திகதிகளில் தமிழகத்தில் தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பின் ஏழாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இதுவாகும். மலர்க்குழுவின் உறுப்பினர்களாக பேராசிரியர் அறிவரசன், க.சச்சிதானந்தன், தமிழ்க்கனல், தி.அழகிரிசாமி, குணத்தொகையன், பூங்குழலி, மணிமொழி, தமிழ் வேங்கை ஆகியோர் பணியாற்றியிருக்கின்றனர். முருகர் குணசிங்கம், கா.இந்திரபாலா, ஏகநாயகிவல்லி சிவராசசிங்கம், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, த.செயராமன், இளங்குமரனார், சி.அ.யோதிலிங்கம், வே.பிரபாகரன், பழ நெடுமாறன், ச.பொட்டு, கு.முத்துக்குமார், முருகதாசன், லசந்த விக்கிரமதுங்க, மறவன்புலவு க.சச்சிதானந்தம், உள்ளிட்ட ஏராளமான தமிழக-இலங்கைப் பிரமுகர்களின் 88 படைப்புக்கள் இம்மலரை அலங்கரிக்கின்றன. ஈழவிடுதலைப் போராட்டத்தின் பயணத்தை பகிரும் அரிய பல புகைப்படங்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

What is A sporting events Handicappers

Articles why does Disability Gambling Within the Football Works? Ai Wagering Selections Disability Gaming Faq Gambling Equipment Details by time months for your greatest sports