16419 சிறுவர்களுக்கான சின்னஞ்சிறு கதைகள்.

கமலினி கதிர். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2020. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்).

40 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 60.00, அளவு: 24×18 சமீ.

யாழ்ப்பாண மாவட்டம், மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திருமதி கமலினி கதிர்காமநாதன். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான இவர் தாயகத்தில் தட்டெழுத்தாளராகவும், எழுதுவினைஞராகவும், ஆசிரியையாகவும் பணியாற்றியவர். திருமணத்தின் பின்னர் கொழும்பில் சிலகாலம் வாழ்ந்த இவர் 2002இல் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்து சென்றிருந்தார். அங்கு 2006 முதல் சூரிச்-டிட்டிக்கோன் தமிழ்ப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இந்நூலில் சிறுவர்களுக்கேற்றவாறு பத்து சிறுகதைகளை அவர் எழுதி வழங்கியுள்ளார். மந்திரக் கிழவியும் மாதவனும், சுட்டிச் சிறுமி, பெருவிரல் பெருமான், குங்பூவும் ஜலனும்,  எலிக்கும் எலிக்கும் கல்யாணம், அக்கக்கா குருவி, நட்பு, ஒற்றுமை, குமரனும் பாட்டியும், டிங்கிலிக்கான் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Compresse Revia 50 mg in vendita

Valutazione 4.5 sulla base di 24 voti. Cosa devo dire al mio medico se prendo Naltrexone generico? Il costo di Revia 50 mg Croazia C’è

15299 கரகக் கலைச் சிகரம் வடிவேல்.

வே.வடிவேல் (மூலம்), ஆ.மு.சி.வேலழகன் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: இளவரசி உதயசூரியன் பதிப்பகம், வள்ளுவன் மேடு, மாவேற்குடாப் பிரிவு-01, திருப்பழுகாமம், 1வது பதிப்பு, கார்த்திகை 2019. (கொக்கட்டிச்சோலை: அக்ஷயன்  அச்சகம், பிரதான வீதி). xxii, 60 பக்கம்,