9008 பொது அறிவு.

காஞ்சனா இரத்தினம். வவுனியா: காஞ்சனா இரத்தினம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2005. (வவுனியா: ஜெய்னிக்கா பிரின்டர்ஸ்).

v, 258 பக்கம், விலை: ரூபா 390., அளவு: 25×18 சமீ.

அனைத்துத் துறைசார்ந்த விடயங்களையும் உள்ளடக்கிய 600 இற்கும் மேற்பட்ட வினா விடைகளுடனும், விடய விழிப்புக்கள் பலவற்றை உள்ளடக்கியும்  இந்நூல் வெளிவந்துள்ளது. மருத்துவமும் கண்டுபிடிப்புகளும், நாடுகளும் அவற்றின் சிறப்புகளும், உலகின் முக்கிய வரலாற்றுப் பதிவுகள், விண்வெளியியலும் நவீன கண்டுபிடிப்புகளும், உயிரினங்களும் சிறப்பியல்புகளும், துறைசார் விடயங்களில் தடம்பதித்தவர்கள், உலகப் பொது அமைப்புகள், தகவல் தொழில்நுட்பங்கள், உலக விளையாட்டுக்கள், நோபல் பரிசு, உலகின் முதலாவது நிகழ்வுகள், தாய்நாடு பற்றியவை, பெண்கள் உலகம், கலை கலாச்சாரம், தமிழ் இலக்கிய எழுத்தாளர்கள், தத்துவ ஞானிகளும் சிந்தனாவாதிகளும், புவியியல், தாவரவியல், உலக நாடுகளும் அதிபர்களும், உலகக் கோப்பைக் கால்பந்தாட்டம், இயற்பெயரும் புனைபெயரும், உலக விமானப் போக்குவரத்துகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், முக்கிய தினங்கள், ஆண்டுகள், என இன்னோரன்ன 46 தலைப்புகளில் இந்நூல் தகவல்களைப் பொதிந்துவைத்துள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  158852). 

ஏனைய பதிவுகள்

9898 பேராசிரியர் அல்லாமா உவைஸ் (இலங்கைத் தமிழ்ச் சுடர்மணிகள் வரிசை இல. 19).

எஸ்.எச்.எம்.ஜெமீல். கொழும்பு  6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 56 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா

8830 ஸ்ரீ சச்சிதானந்தா சுவாமிகள்.

ஸ்ரீ சச்சிதானந்த செல்லம்மா. கைதடி: ஸ்ரீ சச்சிதானந்தா ஆசிரமம், கைதடி வடக்கு, 1வது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: சிவா அச்சகம், கைதடி). (8), 63 பக்கம், தகடுகள், விலை: ரூபா 100., அளவு: 20.5×15

10917 நல்லாசிரியனுக்கான விதப்புரை.

பதிப்பாசிரியர் குழு. தெகிவளை: க.த.இராஜரட்ணம் சேவைநலன் பாராட்டுக் குழு, 129/1, 1/1, சரணங்கர வீதி, 1வது பதிப்பு, பங்குனி 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). viii, 256