9203 கந்தசட்டிப்புராணம்.

நா.சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார் (மூலம்), ச.பத்மநாபன் (பதிப்பாசிரியர்). சிலாபம்: ஸ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானம், முன்னேஸ்வரம், 2வது பதிப்பு, 2014, 1வது பதிப்பு, 1895. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

xix, 97 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-0877-15-7.

ஈழத்துப் புராண மரபில் விரத புராணங்கள் தனித்துவமானவை. ஈழத்தில் சிறப்பாக யாழ்ப்பாணத்து சைவத் தமிழ்ப் பண்பாட்டில் ஊறித் திழைத்த கலாசாரம் கந்தபுராண கலாசாரமாகும். கந்த புராணத்துக் கலசாரத்தில் மேன்மைபெறும் சைவமரபில் முருக வழிபாடு தனித்துவமானதாக விளங்குகின்றது. இந்து சமய விரத மரபில் கந்த சஷ்டி விரதம் மிகவும் முக்கியத்துவமுடையதாகும்.  இக் கந்தசஷ்டி விரதத்தினைப் புராணமாகப் பாடிய பெருமைக்குரியவர் வட்டுக்கோட்டை வரகவி பிரம்மஸ்ரீ நா.சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார் ஆவார் .இவர் 30.07.1848இல் பிறந்து 10.10.1929இல் மறைந்தவர். சுன்னாகம் வரத பண்டிதருக்கு நிகராகப் பல்வேறு விரத புராணங்களையும் புராணங்களையும் பாடியுள்ளார். அவற்றுள் தென் கோயிற் புராணம் ஏட்டு வடிவிலிருந்து நூல்வடிவில் வெளிவர ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. கந்த சட்டிப் புராணம் இரண்டாம் பதிப்பாக இப்பொழுது வெளிவந்துள்ளது. மூல நூலாசிரியர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். பதிப்பாசிரியர் பத்மநாபனின் தாய்வழிப் பாட்டனாராவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருதத்துறை விரிவுரையாளரும், மேற்படி முன்னேஸ்வர தேவஸ்தான பிரதம குருவும் தர்மகர்த்தாவுமான பிரம்மஸ்ரீ ச.பத்மநாபன் அவர்கள் இச்சிறுநூலைப் பதிப்பித்துள்ளார்.

14A11

கந்தசட்டிப்புராணம். நா.சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார் (மூலம்), ச.பத்மநாபன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்துப் பண்பாட்டு நிதியம், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, மீள்பதிப்பு, 2018, 1வது பதிப்பு, 1895. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், நல்லூர்).

ix, 105 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-9233-73-2.

ஈழத்துப் புராண மரபில் விரத புராணங்கள் தனித்துவமானவை. ஈழத்தில் சிறப்பாக யாழ்ப்பாணத்து சைவத் தமிழ்ப் பண்பாட்டில் ஊறித் திழைத்த கலாசாரம் கந்தபுராண கலாசாரமாகும். கந்த புராணத்துக் கலசாரத்தில் மேன்மைபெறும் சைவமரபில் முருக வழிபாடு தனித்துவமானதாக விளங்குகின்றது. இந்து சமய விரத மரபில் கந்த சஷ்டி விரதம் மிகவும் முக்கியத்துவமுடையதாகும்.  இக் கந்தசஷ்டி விரதத்தினைப் புராணமாகப் பாடிய பெருமைக்குரியவர் வட்டுக்கோட்டை வரகவி பிரம்மஸ்ரீ நா.சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார் ஆவார். இவர் 30.07.1848இல் பிறந்து 10.10.1929இல் மறைந்தவர். சுன்னாகம் வரத பண்டிதருக்கு நிகராகப் பல்வேறு விரத புராணங்களையும் புராணங்களையும் பாடியுள்ளார். அவற்றுள் கந்த சட்டிப் புராணம் மீள்;பதிப்பாக இப்பொழுது வெளிவந்துள்ளது. மூல நூலாசிரியர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். பதிப்பாசிரியர் பத்மநாபனின் தாய்வழிப் பாட்டனாராவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருதத்துறை விரிவுரையாளரும், முன்னேஸ்வர தேவஸ்தான பிரதம குருவும் தர்மகர்த்தாவுமான பிரம்மஸ்ரீ ச.பத்மநாபன் அவர்கள் இச்சிறுநூலைப் பதிப்பித்துள்ளார். இந்நூலின் மீளச்சு 2018இல் மலேசிய திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாட்டினையொட்டி கொழும்பில் வெளிவந்துள்ளது. (முன்னைய முன்னேஸ்வர தேவஸ்தானப் பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 9203).

ஏனைய பதிவுகள்

Westcasino Provision

Content Genau so wie Funktionier Ihr Erreichbar Casino Prämie Bloß Einzahlung Je Die leser? Konnte Meinereiner Meine Gewinne Nicht mehr da Unserem Kostenlosen 10 Prämie