9212 தாயுமான சுவாமிகள் பாடல்: பொழிப்புரை, குறிப்புரைகளுடன்.

சிவதொண்டன். செங்கலடி: அ.செல்வத்துரை, சிவதொண்டன் நிலையம், 1வது பதிப்பு, பதிப்பு விபரம் தரப்படவில்லை. (மட்டக்களப்பு: கீன் அச்சகம், 75 ஏ, முனை வீதி).

ix, 568 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22×14 சமீ.

தாயுமானவர் சுவாமிகளின் தந்தையார் கேடிலியப்பபிள்ளை வேதாரணியத்தை (திருமறைக்காடு) சேர்ந்தவர். திருச்சிராப்பள்ளி அரசன் முத்துக்கிருஷ்ணநாயக்கரின் சம்பிரதியாக (தலைமைக் கணக்கர்) பணியாற்றியவர். தாயுமான சுவாமிகளின் தாயார் கஜவல்லி அம்மையார். நீண்டகாலமாக மகப்பேறற்றிருந்து, திருச்சிராப்பள்ளி தாயுமான பெருமானை நிதமும் வணங்கிவந்துள்ளார். அவரருளால் தான் நீண்டகாலம் ஏங்கிப் பெற்ற மகவுக்கு தாயுமானவர் என்று பெயரிட்டார். பின்னாளில் தாயுமானவர், பக்தி இலக்கியத்தில் பெரும்புகள் பெற்றார். தாயுமானவரின் பாடல்களை இந்நூல் பொழிப்புரை, குறிப்பரைகளுடன் வழங்குகின்றது. சிவதொண்டன் என்ற பெயரில் இவ்வரிய உரையை எழுதியவரின்  உண்மைப்பெயர் குறிப்பிடப்படவில்லை.

ஏனைய பதிவுகள்

16955 பன்னாட்டுக் குற்றங்கள்.

இராமநாதன் நாகமணி ஸ்ரீ  ஞானேஸ்வரன். திருக்கோணமலை: ஸ்ரீராம் பதிப்பகம், 159 A, கடல்முக வீதி, 1வது பதிப்பு, ஜீலை 2022. (திருக்கோணமலை: ஸ்ரீராம் பிரிண்டர்ஸ், 159A, கடல்முக வீதி). 287 பக்கம், விலை: ரூபா