9219 தெய்வீகமும் சமாதானமும்.

கதிர் சரவணபவன். வவனியா: தோணிக்கல் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் (ஆதிசிவன்) ஆலய பரிபாலன சபையினர், 1வது பதிப்பு, மே 2003. (வவுனியா: ஜெய்னிகா கிராப்பிக், 71, வைரவ கோவில் வீதி, வைரவபுளியங்குளம்).

iv, 123 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 215., அளவு: 25×18 சமீ. சிவசித்தாந்த வித்தகர், கலைமணி கதிர்-சரவணபவன், வவுனியா, தோணிக்கல், ஆலடி வீதியைச் சேர்ந்தவர். அவர் எழுதிய சில ஆன்மீகக் கட்டுரைகளும், பல்வேறு திருவூஞ்சற் பாடல்கள், இடர் நீக்கு பாடல்களும் தொகுக்கப்பெற்று  இந்நூல் வெளிவந்துள்ளது. விதிவிலக்காக இத்தொகுப்பில் பாடசாலை கீதங்களும், நடிகர் சிவாஜி கணேசன், ஓவியக் கலாஜோதி நடராசா, போன்றோரை வாழ்த்திப் பாடிய பாடல்களும் இடம்பெற்றுள்ளன. மொத்தமான 24 படைப்புகளிலும் பெரும்பாலானவை வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், திருக்கேணமலைப் பிரதேசத்துக் கோவில்களின் மேற் பாடப்பெற்றவையே. பிராங்போர்ட் (ஜேர்மனி) கற்பக விநாயகர் மேற் பாடப்பெற்ற பாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 135554).           

ஏனைய பதிவுகள்

11167 ஸ்ரீ ராமகான சபா: இலங்கை பிராமணர் சங்கம் 1939-2014.

பவள விழா மலர். ஞானலக்ஷ்மி ஞானசேகர ஐயர் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: ஸ்ரீ ராம கான சபா, இல.57, விவேகானந்தா வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை). xxxiv, 116