9229 இறசூல் சதகம்.

அப்துல் காதர் லெப்பை. மட்டக்களப்பு: மணிக்குரல் பதிப்பகம், 20, ஆமன் கோர்னர், 1வது பதிப்பு, ஜனவரி 1966. (மட்டக்களப்பு: ராஜன் அச்சகம், முனைத்தெரு).

x, 99 பக்கம், விலை: ரூபா 2., அளவு: 16.5×12 சமீ.

மட்டக்களப்பு மாவட்ட இஸ்லாமிய வளர்ச்சி பற்றிய முன்னுரையுடன் கூடியது. சிறந்த சிந்தனையாளரும், கவிஞருமான ஆசிரியர் திலகம் அப்துல் காதர் லெப்பை (1913-1984) கிழக்கிலங்கையின் காத்தான்குடிக் கிராமத்தைத் தாயகமாகக் கொண்டவர். ஒரு ஆசிரியராகப் பணியாற்றிய இவர் கல்வித்துறையினரால் பெரிதும் போற்றப்பட்டவர். சதகம் என்னும் யாப்பு முறையைக் கையாண்டு இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. இறசூல் சதகம் முஸ்லீம்களுக்கு மாத்திரம் உரியதன்று. உயிர்ப்புள்ள மரபுக்கவிதை நேசர்கள் அனைவருக்கும் உரியது. தீமை தரும் உறவு, பல்வகைப் பாபங்கள், மாற்றமுடியாதது, சாந்தி இல்லை, ஆச்சரிய அச்சம், அடிமைப்பெண், அநாகரிகப் பெண், இன்னது வரும் இன்னது இருப்பின் போன்ற இன்னோரன்ன 99 பாடல்களை இந்நூல் கொண்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 87298).

ஏனைய பதிவுகள்

12725 – செந்தமிழ் பாப்பாப் பாடல்கள்.

பத்மா இளங்கோவன். யாழ்ப்பாணம்: நாவேந்தன் பதிப்பகம், மயூரன் இல்லம், இராமலிங்கம் வீதி, திருநெல்வேலி கிழக்கு, 1வது பதிப்பு, ஜுன் 2015. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பிரின்டர்ஸ், 555, நாவலர் வீதி). (2), 47 பக்கம்,