9233 இஸ்லாமிய வரலாற்றுக் கதைகள்.

எம்.ஏ.ரஹ்மான். கொழும்பு 13: அரசு வெளியீடு, 231 ஆதிருப்பள்ளித் தெரு, 2வது பதிப்பு, ஒக்டோபர் 1972, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1972. (கொழும்பு 13: ரெயின்போ பிரிண்டர்ஸ்).

112 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 1.90, அளவு: 18×12.5 சமீ.

சிறுவர் இலக்கியத்துறையில், இளமைப்பருவத்திலே, காந்தி போதனை ஆகிய இரு நூல்களை எழுதிய ஆசிரியரின் மூன்றாவது நூல் இது. பல்வேறு இஸ்லாமியப் பெரியார்களால் காலத்துக்குக் காலம் சொல்லப்பட்டு வந்த கதைகளை  ‘இஸ்லாமிய வரலாற்றுக் கதைகள்’ என்ற தலைப்பில் வீரகேசரி வார வெளியீட்டில் 27.2.1966 முதல் 19 வாரங்களாகத் தொடர்ந்து எழுதிவந்தார்.  அத்தொடரின் நூலுருவே இதுவாகும். நோன்பு, ஏக்கம், காருண்யம், தகுதி, துயர், நேர்மை, தொழுகை, மரணம், தயாளம், கொடை, சத்தியம், வசதி, பாங்கு, சபதம், வீரம், தாகம், ஆதாயம், கொள்கை, அறிவு, வீரம், நீதி, நோக்கு, பண்பு, மன்னிப்பு, எழுத்து, சாதனை, நிலம், பதவி, முறைமை, நேர்மை, கழுதை, முட்டை, புகழ்ச்சி, விருந்து, படுக்கை, பிரயாணி, பங்கு, தானம், தியாகம், முற்றும் ஆகிய தலைப்புகளில்  அமைந்த 40 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. முதற்பதிப்பை 8.10.1972 இல் 2500 பிரதிகள் கண்ட இந்நூல் விற்பனையில் வரலாறு படைத்து அதே மாதம் 31ம் திகதி இரண்டாவது பதிப்பையும் கண்டிருந்தது. ஏக விநியோகஸ்தராக கொழும்பு வீரகேசரி நிறுவனம் இயங்கியது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 118844).

ஏனைய பதிவுகள்

El Torero Dino Reels 81 Slot Erreichbar

Content Unser 10 besten Casinos pro Elfter monat des jahres 2024: black horse Spielautomat Weitere Aufregende Slots In Novomatic Spielthema, Timbre Ferner Grafiken: Spielsaal cabaret