9251 வலிகாமத்து மண்ணின் மாந்தர்கள் (நடைச் சித்திரம்). 

மாவை வரோதயன் (இயற்பெயர்: சிவகடாட்சம்பிள்ளை சத்தியகுமாரன்). கொழும்பு 6: தேசிய கலை இலக்கியப் பேரவை, 571/15, காலி வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2010. (கொழும்பு 13: கௌரி அச்சகம், இல. 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).

94 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 18.5×12.5 சமீ. , ISBN: 978-955-8637-28-9.

ஆசிரியரின் மறைவின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்டுள்ள அவரது நூல். இது முன்னர் தாயகம் சஞ்சிகையில் 2006 ஜுன் முதல் 2008 டிசம்பர் வரை தொடராக வெளிவந்திருந்தது. நூலுக்கான முன்னுரையையும் அவரே எழுதிச்சென்றுள்ளார். திறந்த பொருளாதாரம், பூகோளமயமாதல், என்பவற்றின் பாதிப்பிற்குள்ளாகாத யாழ்ப்பாணக்குடாநாட்டின் 1970-80 காலகட்டத்து மனிதர்களின் வாயிலாக சில சுவையான சம்பவங்களைப் பதிவுசெய்யும் நடைச்சித்திரங்கள் இவை. நுளம்பு நாகரத்தினம், சுருட்டு சங்கரப்பிள்ளை, கண்பரிகாரி கனகம்மா, மேசன் மகாலிங்கம், மாங்கண்டு மதியாபரணம், சகலகலா சுந்தரமூர்த்தி, பெரியவ பொன்னம்மா, பரந்தன் பாலசிங்கம், குழந்தை குமாரசுவாமி, தலைவர் தவராசா ஆகிய பத்து பாத்திரங்களின் வழியாக ஈழத்தமிழரின் சமூக வரலாற்றின் பல சுவைமிகு சம்பவங்களை நடைச்சித்திரங்களாகப் பதிவுசெய்கின்றார்.

ஏனைய பதிவுகள்

16941 மன்னார் மாதோட்ட தமிழ்ப் புலவர் சரித்திரம்.

பெஞ்சமின் செல்வம். யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 2வது பதிப்பு, 2020, 1வது பதிப்பு, 1978. (யாழ்ப்பாணம்: நியூ

15912 ஒரு கனவின் மீதி: ரவீந்திரம்.

பால.சுகுமார் (மலர் தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: மைக்கல் கொலின், மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 100 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×18.5

15134 மகாபாரதம்.

கே.வி.குணசேகரம். கொழும்பு: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு, 1வது