9266 புரையை அகற்றாமல் புற்றுநோய்க்கு வைத்தியமா?

நய்லா கபீர் (ஆங்கில மூலம்), ஸ்டெலா விக்டர் (தமிழாக்கம்). மட்டக்களப்பு: சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், இல.20, டயஸ் ஒழுங்கை, 1வது பதிப்பு, 2007. (மட்டக்களப்பு: வணசிங்கா அச்சகம், 126/1, திருமலை வீதி).

iv, 39 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 25×18 சமீ., ISBN: 978-955-8695-02-9.

அபிவிருத்தியில் பெண்கள் என்ற கருத்தாக்கத்தின் கோட்பாட்டுப் பின்புலங்கள் பற்றிய இவ்வுரை ஆங்கிலத்தில் ‘Treating Cancer with Bandaid? The Theoritical Underpinnings of Women in Development Translation of Reversed Realities Gender Hierarchies in Development Thought’ என்ற தலைப்பில் நய்லா கபீர் (Naila Kabeer) அவர்களால் ஆற்றப்பட்ட உரையின் தமிழாக்கமாகும். நய்லா கபீர் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி கற்கைகள் நிறுவனத்தின் அங்கத்தவர். இவர் பங்களாதேஷ், இந்தியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் பால்நிலை அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் செயலாற்றியுள்ளார். அபிவிருத்தியானது பெண்களை வேலைச் சுமையிலிருந்து விடுவிப்பதுடன் வீட்டில் தனித்திருப்பதிலிருந்து பெண்களை வெளியில் கொண்டுவந்து முழுமையான மனிதஜீவியாகும் வாய்ப்பைத் தருகின்றது.  ஆண்களைப் போன்ற வழிகளில் பெண்களும் தமது மனங்களையும் திறமைகளையும் செயற்படச் செய்கின்றது.  பொருளாதார வளர்ச்சியானது ஆண்களுக்குச் சாதகமானதா அல்லது பாதகமானதா எனும் வாதத்தை நடத்த கதவுகளைத் திறந்து விடுகின்றது. ஆனால் பெண்களுக்கோ பொருளாதார  வளர்ச்சி பற்றிய விவாதமானது, பெண்கள் விலங்குகள் போல் சுமைகளை சுமப்பதிலிருந்து விடுபட்டு மனித இனத்தில் இணைந்துகொள்வதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கவேண்டும் என்பது பற்றிய விவாதமாகும். இதனை இவ்வுரை விளக்கமாகப் பதிவுசெய்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50560).

ஏனைய பதிவுகள்

13318 உள்ளதைச் சொல்கிறேன் நல்லதைச் சொல்கிறேன்.

தர்மலிங்கம் மனோகரன். சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2017. (சென்னை 94: ஆதிலட்சுமி கிராஃபிக்ஸ்). xviii,

Cent Harbors On the web

Content Exactly what Applications Shell out Your Real money Playing Video game? How to Winnings A lot more When To play Cent Slots The Better