9271 மாற்றுச் சிந்தனையும் விரிபடு களமும்.

செல்வி திருச்சந்திரன். கொழும்பு 6: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி,  1வது பதிப்பு, (ஆண்டு விபரம் தரப்படவில்லை). (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

vi, 206 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×14 சமீ., ISBN: 955-9261-32-0.

சமூக அரச நிலைகளினூடு வேறுபட்டு விளங்கும் பால்நிலைத் தோற்றங்கள்: ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம், பெண் வெறுப்பும் அவற்றின் ஐதீக வெளிப்பாடுகளும், தமிழ் இலக்கியத்தில் பெண் வெறுப்பு-ஓர் விளக்கம், மொழியும் ஆண்வழிச் சமூக அமைப்பும், கிழக்கு  இலங்கையில் யுத்தகாலத்தில் பெண்களின் குடும்பமும் வீடுசார் கட்டமைப்பும் சிதைவுறுகின்றனவா அல்லது மீளமைக்கப்படுகின்றனவா?, பெண்மை தொடர்பான கருத்தியலில் பெண்ணின் பாலுணர்ச்சி, பெண்களினது ஆளுமை விருத்திக்கு மனித உரிமைகள் பற்றிய பிரக்ஞையும் விளக்கமும், புதிய கொம்யூனிஸ்ட் பிரகடனம் ஒன்றிற்கான தேவையை நோக்கி, நவீனத்துவப் பெண்ணியத்தை விளங்கிக்கொள்ள ஆகிய தலைப்புகளில் அமைந்த ஒன்பது கட்டுரைகளையும், முறியாத சங்கிலித் தொடர்: யாழ்ப்பாண சீதனமுறை பற்றிய ஆய்வு, வாழ்தல் என்பது மீதான அனுபவப் பகிர்வு, பெண் நிலைவாத விமர்சனக் கண்ணோட்டத்தில் மங்களநாயகம் தம்பையாவின் நொருங்குண்ட இதயம்- ஒரு மீள்பார்வை  ஆகிய மூன்று நூல் விமர்சனக் கட்டுரைகளும், தேடல், புரிந்தால் சரி, உரிமை கற்பு அரசி, மதமும் பெண்ணும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட சிந்தனைச் சிதறல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவை  செல்வி திருச்சந்திரன் அவ்வப்போது ஊடகங்களுக்கு எழுதிய கட்டுரைகளின் தேர்ந்த தொகுப்பாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34959).

ஏனைய பதிவுகள்

Особые онлайн казино в 2024 отнесение к категории Топот десял веб сайтов в видах игры получите и казино кактус распишитесь аржаны

Профессиональный обзор диалоговый-казино добродетель ответы реальных клиентов – вот водящие аспекты подбора картежного сайта. Зарегистрированные читатели Casinoz имеют возможность переводить бумагу ответы об интернет-игорный дом.

10035 கிராமிய பூபாளம் 2015: சிறப்பு மலர்.

மலர்க்குழு. ஜேர்மனி: புங்குடுதீவு தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியம், 1வது பதிப்பு, 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 42 பக்கம், வண்ணப்படங்கள், விலை: அன்பளிப்பு, அளவு: 29×20.5 சமீ. புங்குடுதீவு தொண்டர்