9352 பஞ்சதந்திர லப்த ப்ரணாசம்.

பூ.தியாகராஜ ஐயர். யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை வெளியீடு, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, பங்குனி 1965. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 32 கண்டி வீதி).

xiv, 120 பக்கம், விலை: ரூபா 3.75, அளவு: 21.5×14 சமீ.

வடமொழியில் விஷ்ணுசர்மா எழுதிய பஞ்சதந்திரம் என்ற நூலின் நான்காவது தந்திரமான லப்த ப்ரணாசம் என்ற பகுதியினை இலங்கைக் கல்விப்பகுதியினர் க.பொ.த.உயர்தர வகுப்புக்கும், பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வுக்கும்  உரிய பாடநூல்களுள் ஒன்றாக்கியுள்ளனர். அதற்கேற்ப பஞ்சதந்திரக் கதைகள் தமிழில் வடமொழிச் சுலோகங்களுடனும்,  இலக்கணக் குறிப்புகளுடனும் இந்நூலில் தமிழாக்கம் செய்து தரப்பட்டுள்ளது. முன்னுரை, நூல் வரலாறு, கதைச் சுருக்கமும் உட்பொருளும், குறிப்புச் சொல் விளக்கம், ஆகியவற்றுடன் தவளையரசும் கரும்பாம்பும், சிங்கமும் கழுதையும், யுதிஷ்டிரன் என்ற குயவன், சிங்கமும் நரிக்குட்டியும், பெண்ணின் சாகசம், நந்தனும் வரருசியும், புலித்தோல் போர்த்த கழுதை, ஏமாந்த பெண்ணும் ஏமாந்த நரியும், மணி கட்டிய ஒட்டகம், நரியின் தந்திரம், வெளியூர் சென்ற நாய் ஆகிய பதினொரு கதைகளும் இடம்பெற்றுள்ளன. மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் சம்ஸ்கிருத விரிவுரையாளராகப் பணியாற்றியவர் வியாகரண சிரோமணி பூ. தியாகராஜ  ஐயர் அவர்கள். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  119434). 

ஏனைய பதிவுகள்

Casinos Sportsbooks Web based poker

Posts Caesars Sportsbook app Unlimited betting advertisements is actually destroying sensation of enjoying sports What forms of playing knowledge should i come across at the

Casino Un tantinet Monnaie Profond

Aisé Golden ticket emplacement: Envie de Amuser De Monnaie Palpable : Hein Fabriquer ? Des Pourboire Avec Casino Becasino : Un Salle de jeu Avec