9355 ஈழத்துத் தமிழியல்சார் தமிழ் ஆய்விதழ்கள்: ஒரு கண்ணோட்டம்.

செ.யோகராசா. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், 7, 57வது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஐப்பசி 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).

40 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×15 சமீ., ISBN: 955-8564-13-3.

இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க தமிழியல் ஆய்விதழான ‘தமிழ் உலகு’ வெளியீட்டு விழாவின்போது 11.10.2003 அன்று நிகழ்த்தப்பட்ட உரையின் விரிவான வடிவம். கலாநிதி செ.யோகராசா, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறைத் தலைவராவார். 37வது தமிழ்ச்சங்க வெளியீடாக இது வெளிவருகின்றது. ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தின் மனோநிலை தமிழ் ஆய்விதழ்களின் வருகைக்கு சாதகமற்ற சூழ்நிலையை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடும் ஆசிரியர், ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தின்- ஆங்கிலேயரது ஆட்சியின் பெறுபேற்றினால் உருவான-உயர் வருமானம் தரும் உத்தியோக மோகத்திலிருந்து விடுபடமுடியா நிலையும் அதிலிருந்து உருவான எமது சமூகத்தின் பெரும்பான்மையினரது இயல்பும் தமிழ்சார் கற்கைநெறி தொடக்கம் தமிழ்சார் ஆய்வு, ஆய்விதழ் வளர்ச்சி என்பன வரைக்கும் பெருந்தடையாக இருந்து வந்துள்ளன என்கிறார்.

ஏனைய பதிவுகள்

Casino 10 Euro Gratis 2021

Content Freispielbonusse In Top Online Casinos 2024 – Kostenlose Spins cleopatra Keine Einzahlung Top Casinos Mit Den Meisten Freispielen Ohne Einzahlung Wo Gibt Es Einen