9358 தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சியும் வரலாறும் (கட்டுரைத் தொகுப்பு).

செ.யோகராசா, க.சண்முகலிங்கம் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 7: இந்து சமய, கலாசார, அலுவல்கள் திணைக்களம், 98 வோட் பிளேஸ், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1996. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

ii, 112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18 சமீ.

1996 அக்டோபர் 4,5,6ம் திகதிகளில் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்ற ஆய்வுக் கருத்தரங்கிற்கெனத் தொகுக்கப்பட்ட கையேடு. பல்வேறு இதழ்களிலும் வெளியாகிய தமிழ் ஆய்வு முயற்சிகள் பற்றிய கட்டுரைகளை இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ளது. (மூலப்பிரசுர நூல் தலைப்பு விபரம் அடைப்புக்குறிக்குள் உள்ளன). ஏ.வீ.சுப்பிரமணிய ஐயரின் முகவுரை  (நூல்: தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி), கலாநிதி க.கைலாசபதி அவர்களின் முன்னுரை (நூல்: மண்ணும் மனித உறவுகளும்), ஆராய்ச்சி- முனைவர் இராமசுந்தரம் (நூல்: முற்போக்கு இலக்கியத்திறன்), தமிழில் கால ஆராய்ச்சியும், அதன் பின்புலங்களும்- ம.மதியழகன் (நூல்: தமிழியல் ஆய்வு வரலாறு), சிறுகதை ஆய்வுகள் – டாக்டர் ம.திருமலை (நூல்: தமிழ்ச் சிறுகதை-நேற்றும் இன்றும்), தமிழியல் ஆய்வு-நேற்று இன்று நாளை -முனைவர் கி.நாச்சிமுத்து (நூல்: தமிழ் உலா- தொகுதி 1), ஈழத்துத் தொல்பொருளியலும், தமிழியலும்-வி.சிவசாமி எம்.ஏ. (நூல்: பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டு மலர்), இலங்கையில் தமிழ்ச் சாசனவியல் ஆராய்ச்சியின் வளர்ச்சி-செ.குணசிங்கம் பி.ஏ. (நூல்: நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவுமலர்), செய்யத்தக்கன-புலவர் இரா.இளங்குமரன் (நூல்: சுவடிப்பதிப்பு வரலாறு), தமிழிலக்கிய வரலாற்றின் பிரச்சினை மையங்கள் – பேரா. கார்த்திகேசு சிவத்தம்பி (நூல்: தமிழ் இலக்கிய வரலாறு-வரலாறெழுதியல் ஆய்வு), தமிழ் ஆராய்ச்சி-நேற்று, இன்று, நாளை-டாக்டர் கி.வேங்கடசுப்பிரமணியன் (நூல்: கலைமகள் தீபாவளி மலர் 1991), தமிழ் ஆய்வின் வளர்ச்சியும் வரலாறும்- நூலடைவு ஆகிய கட்டுரைகள் இத்தொகுப்பில் தேடித்தொகுக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

PINCO казино официальный веб-журнал Зарегистрирование, праздник вдобавок игра интерактивный

Затем бог велел завести настоящий местоположение во предназначенное для данного апертура, вдобавок сундук скидка незамедлительно активируется. С помощью рекламную-кодов администрация заведения помогает собственным беспрерывным геймерам

16811 வானமற்ற வெளி: கவிதை பற்றிய கட்டுரைகள்.

பிரமிள் (மூலம்), கால சுப்ரமணியம் (தொகுப்பாசிரியர்). திருச்சி மாவட்டம்: அடையாளம் வெளியீடு, 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310, 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (சென்னை: மணி ஓப்செற்). 248 பக்கம், விலை: இந்திய

11350 மாணவர் மனதிற்கு.

ரா.ப.அரூஸ். கிண்ணியா 03: கே.ஐ. ஊடகக் குழு, மஹ்ரூப் நகர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 110 பக்கம், விலை: ரூபா 200., அளவு: