9359 தமிழ் எழுத்தின் தோற்றம்: ஈழத்திலிருந்து தமிழகத்திற்கு.

பரமு புஷ்பரட்ணம். யாழ்ப்பாணம்: யாழ். மாவட்ட செயலகம், 1வது பதிப்பு, 2004. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் அச்சகம், நல்லூர்).

vii, 126 பக்கம், புகைப்படம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×15 சமீ.

தமிழ் எழுத்தின் தோற்றம்-ஒரு மீள் வாசிப்பு, இலங்கைத் தமிழ்ச் சாசன ஆராய்ச்சியில் அண்மையில் கண்டுபிடித்த கந்தளாய்ச் சாசனம் பெறும் முக்கியத்துவம், ஆகிய இரண்டு முக்கிய கட்டுரைகளை இணைத்து ஒரு அறிமுக உரையுடன் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலை எழுதுவதற்கு அடிப்படை ஆதாரங்களாகப் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான தொல்லியற் சின்னங்கள் ஆசிரியரின் தொல்லியல் ஆய்வின்போது கிழக்கிலங்கையில் கந்தளாய் என்ற இடத்திலிருந்தும், வட இலங்கையில் பூநகரிப் பிராந்தியத்தில் உள்ள பரமன்கிராய், கௌதாரிமுனை, மண்ணித்தலை, கல்முனை போன்ற இடங்களில் இருந்தும் கண்டுபிடிக்கப்பட்டவையாகும். 2004ம் ஆண்டுக்கான வடக்கு கிழக்கு மாகாண அரசின் சாகித்திப் பரிசினை பல்துறை நூலுக்காகப் பெற்றது. நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 213627).                                                                                                                                                                                                           

ஏனைய பதிவுகள்

Beste Verbunden Casinos inside Brd Oktober 2024

Content Besuchen Sie diese Seite – NetBet Kasino: Beste Taschentelefon Spielbank Datenschutz Häufig gestellte fragen nach Angeschlossen Spielbank Vortragen Unser besten Kasino Bonus Angebote 2024