9373 தமிழ் மொழியில் இலக்கணச் சிறப்பு.

எஸ்.தில்லைநாதன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7 (ப.எ.4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்).

xvi, 192 பக்கம், விலை: இந்திய ரூபா 55., அளவு: 17.5×12 சமீ.

துறைநீலாவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட சைவப்புலவர் சா.தில்லைநாதன், தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் புலமைமிக்கவர். பயிற்றப்பட்ட முதலாம்தர தமிழ் ஆசிரியரான இவர் பின்னாளில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் போரதீவுப்பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றியவர். மண்டூர் ஆலயத்தின் அறங்காவலர் சபை உறுப்பினருமாவார். இந்நூலில்  திராவிட மொழிக் குடும்பம், இலக்கண வரலாறு, பதங்கள், முதனிலை எழுத்துக்கள், பெயர்ச் சொற்கள் திணை, பால்உணர்த்துதல், வேற்றுமைகள், சொற்பாகுபாடு, வினைச்சொற்கள், வினைச்சொல் ஆக்கம், சார்பெழுத்துக்கள், தன்வினையடியிலிருந்து பிறவினை முற்றுகளும் எச்சங்களும் ஆக்கப்பெறுதல், சொற்றொடர், புணர்ச்சி வகை, யாப்பு, கவிதையின் பண்புகள் ஆகிய 15 தலைப்புகளில் தமிழ் இலக்கியத்தின் சிறப்பினை இந்நூலில் பதிவுசெய்திருக்கிறார். ஆசிரியர் ஏற்கெனவே ‘தமிழ்மொழியில் இலக்கியச்சிறப்பு’ என்னும் நூலையும் சமகாலத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் பார்க்க: நூல்தேட்டம் பதிவிலக்கம் 5762. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 180543).                                        

ஏனைய பதிவுகள்

Betnflix Spielbank

Content Wo Findet Man Unser Besten Online Casinos Via Diesem Prämie Exklusive Einzahlung? Für Pass away Spiele Kann Der Provision Verwendet werden? Angeschlossen Kasino 10