9375 நன்னூல் உதாரண விளக்கம்.

நாவலர் கோட்டம் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை (மூலம்), க.வீரகத்தி (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: நான்காவது அனைத்துலகத் தமிழராய்ச்சி மகாநாட்டு நினைவு வெளியீடு, ஸ்ரீ சண்முகநாதன் புத்தகசாலை, 4வது பதிப்பு, ஜனவரி 1974, 1வது பதிப்பு, 1912. (யாழ்ப்பாணம்:  ஸ்ரீ சண்முகநாதன் அச்சகம்).

ix, 38 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.

யாழ்ப்பாணத்துப் புலவர்  நாவலர் கோட்டம் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் 1902இல் வெளியிட்ட அபிதானகோசம் தமிழ்க் கலைக்களஞ்சியத்துக்கான முன்னோடியாகும் 1883இல் எழுதிய இலங்கைச் சரித்திர சூசனம் வரலாற்றுத்துறையில் இலங்கையில் எழுதப்பட்ட முன்னோடி நூலாகக் கருதப்படுகின்றது.  மருத்துவத்துறையில் இவர் எழுதிய வைத்திய விசாரணி இன்றும் விதந்து போற்றப்படும் ஒரு நூலாக உள்ளது. அவர் 1912இல் வெளியிட்ட நன்னூல் உதாரண விளக்கம் பண்டிதர் க.வீரகத்தியின் (1858-1917) பதிப்புரையுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டையொட்டி வெளியிடப்பட்டிருந்தது.  நன்னூல் 13ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  91177).

ஏனைய பதிவுகள்

Gold Rush Slot Machine

Content How Fast Are Online Gambling Website Cash Outs? – https://mrbetlogin.com/iron-assassins/ Free To Play Big Time Gaming Slot Machine Games Does Golden Heart Games Pay