9475 நாட்டிற்கு நயம் தருவன: விவசாயக் கைந்நூல்.

பொன்னையா மாணிக்கவாசகர். நீர்வேலி: வலி-கிழக்கு தென்பகுதி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், 1வது பதிப்பு, 1975. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி, சுண்டிக்குளி).

(8), 260 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

விவசாய விரிவாக்க உத்தியோகத்தராகக் கடமையாற்றிய மேலைப்புலோலியூர் பொன்னையா மாணிக்கவாசகர் எழுதிய நூல். யாழ் குடாநாட்டின் தோற்றலும் யாழ் மாவட்ட மண்ணின் மாண்பும், யாழ் மாவட்ட நீர்வளமும் விநியோகமும், சிறுதோட்ட உளவு இயந்திரங்கள், நெல் வேளாண்மை, சிறுதானியம் (சோளம், இறுங்கு, குரக்கன், சாமை, பனிச்சாமை, வரகு, தினை), கிழங்கினம் (சிறுவள்ளி, கொடிவள்ளி, மரவள்ளி, வத்தாளை, சட்டிக்கரணை, உழவர்க்கு உகந்த உருளைக்கிழங்கு), சரக்கு வகை (மிளகாய், செஞ்சுடர் சந்தக்கா, சிறுவெங்காயம், பெரிய வெங்காயம், கடுகு, கொத்தமல்லி, வெந்தயம், சீரகம்), பருப்பு இனப் பயிர்கள் (துவரை), சர்க்கரை இனப் பயிர் (சீனிபீற்), எண்ணெய்ப் பயிர் (சோயா அவரை, நிலக்கடலை, சூரியகாந்தி, எள், முத்தாமணக்கு), தும்புப் பயிர்கள் (சணல், புளிமஞ்சி, பருத்தி), மரம் நாட்டு விழா, அறியாமையாலும் அவதானக் குறைவாலும் ஆபத்து விளையும், அரசாங்க உத்தரவாத கொள்வனவுத் திட்டத்தின் விலைப் பட்டியல், அளவைகள்ஆகிய 15 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 85166).   

ஏனைய பதிவுகள்

Ufc Gambling Picks

Content More than just Ufc Picks Ufc 293 Better Bets: Simple tips to Bet on Ufc Fights? Before you Understand Ufc 294 Predictions Score $15

14950எங்களுடன் இன்னமும் வாழும் மாவை வரோதயன்-நினைவு மலர்.

மலர்க் குழு. கொழும்பு 6: தேசியகலை இலக்கியப் பேரவை, இல. 571×15, காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை). 60 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: