9480 உள்ர் உணவு செய்முறைகள்.

மூளாய் மாதர் உற்பத்திக் குழு. சுழிபுரம்: சிறுவர் பாடசாலை ஆசிரியர் பயிற்சி நிலையம், மூளாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1990. (மானிப்பாய்: சாந்தினி அச்சகம்).

26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

17.10.1990 இல் மூளாய் உற்பத்திக் குழுவினால் லயன்ஸ் கிளப் ஆதரவில் நடந்த கிராமிய சந்தையில் மாதர்களினால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளின் செய்முறைகளை நூல்வடிவில் வெளியிட்டுள்ளார்கள். ஒடியல்மா ரொட்டி, பனம்பூரான் குழம்பு என்று பல்வேறு பிரதேச உற்பத்திகளைக்கொண்டு தயாரிக்கப்படக்கூடிய உணவுவகைகள் இச்செய்முறை நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 84613).

ஏனைய பதிவுகள்